சூர்யா, தனுஷ் மற்றும் பிரபாஸ் போன்ற இன்னும் சில நடிகர்களின் திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி இயங்குதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கின்றன. பசங்க-2 படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடித்திருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | தளபதி 66-ல் விஜயுடன் ஜோடி சேரும் புஷ்பா ஹீரோயின்?
அடுத்ததாக ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் 'ராதே ஷியாம்'. 1970களின் ஐரோப்பாவை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெகபதி பாபு, சத்யராஜ், பாக்கிய ஸ்ரீ, சத்யன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச்-11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக கமல்.கே.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாள மொழி திரைப்படம் 'படா'. இப்படத்தில் குஞ்சாக்கோ கோபன், ஜோஜூ ஜார்ஜ், விநாயகன், திலீஷ் போத்தன், மம்முட்டி போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் கலந்த அதிரடி திரைப்படம் 'மாறன்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், ராம்கி, அமீர் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச்-11ம் தேதி நேரடியாக ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து எம்.மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' படம் இந்த வரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவான தெலுங்கு திரைப்படம் 'கில்லாடி' இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | இயக்குநர் பாலாவுக்கு விவாகரத்தா! காரணம் இதுதான்..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR