புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கிரிக்கெட்டுக்கு அப்பால் வெவ்வேறு துறைகளில் ரன்கள் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஒரு Web Series-சுடன் OTT தளத்திற்குள் நுழையவுள்ளார்கள். சாக்ஷி (Sakshi Dhoni) மற்றும் எம்.எஸ்.டி ஆகியோர் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பேனரை 2019 ஆம் ஆண்டில் 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்துடன் அறிமுகப்படுத்தினர். இப்போது, அவர்கள் ஒரு Web Series-ஐ வெளியிடவுள்ளனர். இது ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளரால் எழுதப்பட்டது என்றும் ஒரு புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாட்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்
பொழுதுபோக்கு உலகில் இறங்குவதற்கான தோனியின் முடிவைப் பற்றி பேசிய சாக்ஷி, 'ஆக்கபூர்வமான செயலில் யோசனைகளையும் சிந்தனையையும் முன்வைக்கும் செயல்முறைக்கு நான் அதிக கவனம் செலுத்தியுள்ளேன். வாழ்க்கைக்கான ஒரு கருத்தை திரையில் காணும் மகிழ்ச்சி என்னைக் கவர்ந்திழுக்கிறது. மேலும் செயல்முறை தரம் சார்ந்ததாக இருப்பதை உறுதிசெய்கிறோம். நாங்கள் 'The Roar of the Lion’-ஐ உருவாக்கும் போதே, பொழுதுபோக்கு துறையில் நுழைய இதுவே சரியான தருணம் என்று நினைத்தோம். '
ALSO READ: IPL 2020: ICC-ன் COVID-19 விதியை மீறிய ராபின் ஊத்தப்பா, Viral ஆகும் Video
தோனி ஆல்ஃபா நிறுவனத்தின் உரிமையாளர்
சாக்ஷி மேலும் கூறுகையில், 'இந்த கதை மிகவும் நல்ல, வித்தியாசமான முறையில் எழுதப்பட்டிருக்கிறது. இதை திரையில் கொண்டு வர நாங்கள் காத்திருக்கிறோம். இது ஒரு புராண அறிவியல் புனைகதை, இது ஒரு மர்மமான 'அகோரி' பயணத்தைப் பற்றி சொல்கிறது.’ என்றார். சுவாரஸ்யமாக, தோனி நிறுவனத்தின் ஆஃல்பா என்றும், சாக்ஷி நிறுவனத்தின் ஆல்ஃபா 1 என்றும் அழைக்கப்படுகிறார்கள். சாக்ஷி, “மாஹிக்கு இராணுவத்தின் மீதுள்ள அன்பைப் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். அதை வித்தியாசமான ஒரு முறையில் காட்ட நாங்கள் முயற்சித்துள்ளோம்” என்று விளக்கினார்.
தொற்றுநோய்களுக்கு இடையில் வாழ்க்கை
சாக்ஷி தொற்றுநோய்க்கு மத்தியில் வாழ்க்கை குறித்தும், தனது ஐந்து வயது மகள் ஜீவாவை வீட்டில் எப்படி வைத்திருந்தார் என்பது குறித்தும் பேசினார். அவர் ' நான் ஒரு தாயாக அவளை வளர்ப்பதற்கு பதிலாக நானும் அவளுடன் ஒரு குழந்தையானது போல் எனக்குத் தோன்றுகிறது. அவளுடைய அனைத்து ஆன்லைன் வகுப்புகளிலும் நானும் அவளுடன் இருக்கிறேன், அவளுடன் அமர்ந்து கவனிக்கிறேன். லாக்டௌனின் (Lockdown) போது குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய பலவித தொழில்நுட்பங்களின் தேவை ஏற்பட்டது. அதிலும் அவளுக்கு உதவி அவளுடனேயே இருந்தேன்’ எங்கிறார் பெருமையாக சாஷி தோனி.
தோனி மற்றும் சாக்ஷியின் வரவிருக்கும் Web Series-சும், தோனியின் கிரிக்கெட் ஆட்டத்தைப் போலவே அதிரடியாக இருந்து, பல பௌண்டரிக்களை லாவகமாகத் தாண்டிச் செல்லும் என நம்புகிறோம்!!
ALSO READ: MS Dhoni-ன் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை Alyssa Healy!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR