நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: ட்விட்டரில் வைரலாகும் பட ஸ்டில்கள்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Last Updated : Jun 4, 2020, 03:55 PM IST
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: ட்விட்டரில் வைரலாகும் பட ஸ்டில்கள்

முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆர்.ஜே. பாலாஜி எழுதியுள்ளார். இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்குக்கு முன்னரே நிறைவடைந்தது. 

Image

முதல் படம்

இந்த படத்தை  மே 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

READ | நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

 

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படமும் அப்படி ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பாலாஜி. மேலும் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் உறுதியளித்துள்ளனர்.

Image

என்ன கதை

இந்நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மனாக இருக்கும் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களான மெளலி, ஊர்வசி மற்றும் ‘தடம்' படத்தில் நடித்த ஸ்முருதி வெங்கட் உள்ளிட்டோரின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

Image

Image

பட ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன, ட்விட்டரிலும் இது ட்ரெண்ட் ஆகியுள்ளது.

More Stories

Trending News