அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

Indian 2: கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.  அடுத்த ஆண்டு படம் வெளியாகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2023, 03:27 PM IST
  • அனிருத் ரவிச்சந்தர் 'இந்தியன் 2' படத்திற்கு இசையமைக்கிறார்.
  • ஷங்கருடன் அவர் முதல் முறையாக இணைந்து பணியாற்றுகிறார்.
  • அறிமுக வீடியோவில் இசை நன்றாக இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா? title=

கமல்ஹாசன்  - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் இந்தியன் 2 படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  மேலும், படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.  படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய விவரங்களை கூறும் விதத்தில் இந்த வீடியோ அமைந்து இருந்தது.  இதுமட்டுமின்றி, ஷங்கர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் முதல் முறையாக இசையமைக்கிறார்.  இந்தியன் 2 அறிமுக வீடியோவிற்கு அனிருத் ரவிச்சந்தரின் இசை கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!

பல ரசிகர்கள் அனிருத் இசை படத்திற்கு செட் ஆகவில்லை என்றும், ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்து இன்னும் நன்றாக இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் எடிட் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.  சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சிக்குப் பிறகு ட்ரோல்களை எதிர்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அவருக்கு ஆதரவான் பேச்சு இணையவாசிகளிடம் எழுந்துள்ளது.

விக்ரம் நடித்த அந்நியன் மற்றும் விஜய் நடித்த நண்பன் படங்களை தவிர, இயக்குனர் ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார். மேலும் இருவரும் இணைந்து பணியாற்றிய அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது.  ஆனால் இருவரும் இந்தியன் 2 படத்தில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று  தெரியவில்லை. இந்தியன் 2 அறிமுக வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது. அந்தந்த மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இந்த  வீடியோவை வெளியிட்டனர். 

1996ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதியாக நடித்த அதே வேடத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி உள்ளது.  இந்நிலையில், தற்போது இந்தியன் 3 படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பாடத்திற்கான செலவு ஏற்கனவே அதிகமாகி உள்ளதால், 2 இரண்டு பாகங்களாக வெளியிட்டால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.  இதனால் இந்தியன் 3 படத்திற்காக கூடுதலாக சில காட்சிகளை படமாக்க உள்ளனர்.  சமீபத்திய தகவல்களின்படி, இந்தியன் 2 ஏப்ரல் 12, 2024 அன்று வெளியாகும் என்றும், அதே நேரத்தில் இந்தியன் 3 தீபாவளி 2024 அன்று பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது.

கமல்ஹாசன் தவிர, இந்த படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், நெடுமுடி வேணு, விவேக், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், மனோபாலா, வெண்ணிலா கிஷோர், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News