ஷாக் கொடுத்த சுடர்.. கடுப்பான மனோகரி - நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் அப்டேட்!

Ninaithen Vandhai Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2024, 04:13 PM IST
  • நினைத்தேன் வந்தாய் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்.
  • இரவு 7:30க்கு ஒளிபரப்பாகிறது.
  • இந்த தொடரின் இன்றைய அப்டேட்.
ஷாக் கொடுத்த சுடர்.. கடுப்பான மனோகரி - நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் அப்டேட்!

Ninaithen Vandhai Zee Tamil Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Add Zee News as a Preferred Source

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளுடன் துணி கடைக்கு வந்திருக்க அஞ்சலி காணாமல் போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது அஞ்சலி மைக்கில் மைக் டெஸ்டிங் 1 2 3 என்கூட வந்தவங்க எல்லாரும் காணாம போயிட்டாங்க அவங்க எங்க இருந்தாலும் என்கிட்ட வந்துடுங்க நான் இங்கதான் இருக்கேன் என்று சொல்லி பாட்டு பாட எல்லோரும் அஞ்சலி இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். பிறகு அஞ்சலி நீங்க எல்லாரும் எங்க காணாம போயிட்டீங்க நான் பயந்தே போயிட்டேன் என்று சொல்ல இதை கேட்ட சுடர் ஷாக்காக கவின் ஷாக்க கொறை, ஷாக்க கொறை அவ எப்பவும் இப்படித்தான் என்று சொல்கிறாள். 

அதனை தொடர்ந்து குழந்தைகள் எல்லாம் தூங்கி விட சுடர் கார் டிரைவர் ஒருவருக்கு போன் செய்து எல்லோரையும் தூக்கத்தில் காரில் ஏற்றி கொடைக்கானல் செல்வதாக சொல்லி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தி குழந்தைகளை எழுப்பி விட அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

எதுக்கு நீ எங்க லைப்ல வந்த? நாங்க கொடைக்கானல் போயிருப்போம் என்று சுடரிடம் கோபப்பட வெளியே வரும் கனகவல்லி குழந்தைகளை பார்த்து சந்தோஷப்பட்டு சுடருக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிறகு எழிலுக்கும் குழந்தைகள் வந்து விட்ட தகவலை சொல்கிறாள். 

அங்கிருந்து கிளம்பும் சுடர் கையில் வைத்திருந்த பைலை கீழே தவற விட்டுவிட அந்த பேப்பர்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும் போது எழில் அங்கு வந்து விடுகிறான். இருவரும் பார்த்துக் கொள்வார்களா என்ற பில்டப் காட்சிகள் நகர எழில் குழந்தைகளை பார்க்க வீட்டுக்குள் வந்து விடுகிறான். 

அதைத்தொடர்ந்து சுடர் பாட்டியின் டிபன் கடைக்கு வந்து நடந்த விஷயங்களை சொல்கிறாள். மறுநாள் காலையில் எழில் வீட்டுக்கு வரும் மனோகரி கனகவல்லியிடம் குழந்தைகள் வந்துட்டாங்களா என்று சொல்லி அவர்களை பார்த்துட்டு வரேன் என்று மேலே வர ரூம் முழுவதும் இந்துமதி போட்டோக்களாக இருப்பதை பார்த்து கடுப்பாகிறாள். 

பிறகு எழிலை பார்க்க அவனது ரூமுக்கு வர எழில் 2 மினிட்ஸ் சென்று காத்திருக்க சொல்ல அங்கு எழிலும் இந்துமதியும் கட்டிப்பிடித்தவாறு இருக்கும் போட்டோவை பார்த்து இன்னும் பயங்கர கடுப்பாகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

About the Author

Trending News