ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது கூழாங்கல்

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்ற கூழாங்கல் திரைப்படம் தகுதிச் சுற்றோடு வெளியேறியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2021, 01:02 PM IST
ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது கூழாங்கல் title=

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் கூழாங்கல். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்திருந்தார். இயக்குனர் வினோத்ராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடித்தளமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற 50வது இராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. 

ALSO READ மாநாடு படத்தின் 2 நாள் வசூல் விவரங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்!

இதனை தொடர்ந்து தென் கொரிய திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா போன்றவற்றிலும் கூழாங்கல் (Koozhangal) படம் திரையிடப்பட்டது. இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. 

இந்த நிலையில் சமீபத்தில் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருது விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. கூழாங்கல் அதன்படி ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறியிருக்கின்றது. இதனால் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தப்பட்டுள்ளார். இது குறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது.,

ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதே பெரிய சாதனை. ஆம்! ஆனால் இன்னும்! எங்களைப் போன்ற சுதந்திரமான சினிமா தயாரிப்பாளர்களுக்கு நாம் கொண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ சூப்பர் ஸ்டார் ஏரியாவில் புது வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார் - ஒன்றல்ல, இரண்டு ப்ளாட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News