2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி... அடிதடியில் இறங்கிய டாக்டர் கணவன் - பகீர் சம்பவம்

UP Shocking News: ஹோட்டல் அறையின் பாத்ரூமில் 2 ஆண்களுடன் மனைவி ஏற்கத்தகாத நிலையில் இருந்ததை கண்ட கணவன், அவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2024, 06:59 PM IST
  • இதில் கணவன், மனைவி இருவரும் டாக்டர்கள்.
  • மனைவி மற்றும் 2 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
  • இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி... அடிதடியில் இறங்கிய டாக்டர் கணவன் - பகீர் சம்பவம் title=

UP Shocking News: திருமண உறவு என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் சிக்கலுக்கு உரிய ஒன்றாக மாறியுள்ளது. கணவன் - மனைவி ஆகியோருக்கு இடையில் தற்போது பல்வேறு பிரச்னைகள் எழுவதற்கு பல சமூக காரணிகளும், பொருளாதார பிரச்னைகளும் உள்ளன. இது பணக்காரர்களில் இருந்து மத்திய தர வர்க்கத்தினர் என அனைத்து வர்க்க அடுக்குகளில் உள்ள மக்களிடையேயும் விவாகரத்து, மண உறவில் பிரச்னை என்பது இருக்கிறது எனலாம். 

இந்த உறவுச் சிக்கல் சில விஷயங்கள்தான் குற்றச் சம்பவங்களின் பின்னணியாக அமைகிறது. ஆண் - பெண் உறவில் தொடர்ந்து நீடிக்கும் பிரச்னைகள் கொலை, அடிதடி, குடும்ப வன்முறை என நீள்கிறது. சமீபத்தில், கர்நாடகாவில் நிச்சயம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியுடனான திருமணம், அதிகாரிகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த 32 வயது இளைஞர் ஆத்திரத்தில் சிறுமியின் தலைவெட்டி கொலை செய்து, அங்கிருந்த தப்பிச்சென்று தற்கொலை செய்துகொண்ட கொடூர சம்பவத்தை காண முடிந்தது. திருமணத்திற்கு முன்னரே அந்த இளைஞரின் மூர்க்கமான செயல்பாட்டால் அந்த குற்றச் செயல் நடந்தேறியது. 

வைரலான அதிர்ச்சி வீடியோ

அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு ஹோட்டல் அறையில் இரண்டு ஆண்களுடன் ஆட்சேபனைக்குரிய நிலையில் மனைவி இருந்ததை கண்ட கணவர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ தாக்கும் நபருடன் வந்தவர்கள் பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இவருவரின் பெயர்களும் இங்கு வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன் - மனைவி இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக சமீப காலமாக பிரிந்து வாழ்கின்றனர். அந்த கணவன் பிரிந்து வாழும் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கடந்த வியாழக்கிழமை (மே 9) இரவு ஒரு ஹோட்டலுக்கு செல்வதை பார்த்துள்ளார். 

இரண்டுகளுடன் இருந்த மனைவி

அப்போது தனது உறவினர்களுடன் மனைவி இருக்கும் ஹோட்டல் அறைக்கு கணவர் சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி அந்த அறையின் குளியலறையில் இரண்டு ஆண்களுடன் ஏற்கத்தகாத நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். இதனால், கோபமடைந்த கணவரும் அவர் உடன் வந்த உறவினர்களும் மனைவியுடன் இருந்த இரண்டு பேரையும் கண்மூடித்தனமாக தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கினர்.  
செருப்பால் அடித்த கணவன்

குறிப்பாக, அந்த கணவர் மனைவியையும் அந்த இரண்டு பேரையும் குளியலறையில் வைத்து செருப்பால் அடித்தது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. மேலும், அந்த கணவர் ஆபாச வார்த்தை கூறி வசைப்பாடியதும் அந்த வீடியோவில் பதிவானது. மேலும், போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மனைவியை அவர்கள் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். 

மனைவி கைது?

குடும்பச் பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த கணவன் தனது மனைவி மற்றும் அந்த 2 பேர் தவறான நடத்தையில் இருந்ததாக கூறி புகர் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளது. அந்த பெண் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். பிரிந்து வாழும் அவரின் கணவனும் மருத்துவர் என்று கூறப்படுகிறது. அந்த கணவன் மீது மனைவி புகார் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News