ஒரே நாளில் ஓஹோன்னு பட மழை..இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள படங்களின் லிஸ்ட்..!

OTT Releases this week: வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் முதல் ஷாகித் கபூரின் ப்ளடி டாடி படம் வரை பல படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.  

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 03:50 PM IST
  • இந்த வாரம் ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக படங்களும் வெளியாகின்றன.
  • அவதார் 2 படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
  • சில படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
ஒரே நாளில் ஓஹோன்னு பட மழை..இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள படங்களின் லிஸ்ட்..! title=

திரையரங்குகள் பல இருந்தும், ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் படங்கள் மற்றும் தொடர்கள் பார்ப்பது மிகவும் எளிதாக மாறிவிட்டது. ஒன்று, இரண்டு என்றிருந்த ஓடிடி தளங்கள் தற்போது ஆலமரமாக விரிவடைந்து கிடக்கின்றது. இதில் வாரா வாரம் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளியாகிவருகின்றன. அப்படி இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்ட் இதோ. 

பின் வருபவற்றில் ஒரு சில படங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. ஒரு சில படங்களும் தொடர்களும் நாளை (ஜூன் 9ஆம் தேதி) வெளியாகின்றன. அதில் பட லிஸ்டை மற்றும் பார்ப்போம்

கஸ்டடி:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வெளிவந்த படம், கஸ்டடி. ஏராளமான ப்ரமோஷன், நல்ல ஒன்லைன் ஸ்டோரி என அனைத்தும் இருந்தும் படம் மக்களை கவர தவறி விட்டது. இப்படம், அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது.

2018:

மலையாளப்படமான 2018, அம்மாநில ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம், சோனி லைவ் தளத்தில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. 2018 படத்தை குடும்பத்தினருடன் அமர்ந்து வீக் எண்டில் பார்க்கலாம். 

அவதார் 2:

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவதார் 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களின் பெரும் ஆதரவை பெற்ற இந்த படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று வெளியானது. இந்த தளத்தில், இப்படத்தை, சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே பாக்க முடியும். 

மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?

மென் டூ: 

ஆண்களுக்கும் கஷ்டம் உண்டு என்பதை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம், மென் 2. தெலுங்கு மொழியில் வெளியான இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பலருக்கு சிரிக்கவும் உதவியது. இந்த படம், ஆஹா தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. 

ப்ளடி டேடி:

ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி டேடி திரைப்படம், நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் நாளை வெளியாகிறது. இந்த படம் பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. 

அடை மழை காலம்:

புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம், அடை மழை காலம். இந்த படம் ஃபேண்டசி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் நாளை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை நேர மல்லிப்பூ:

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், மாலை நேர மல்லிப்பூ. இந்த படத்தை சஞ்சய் நாராயணன் இயக்கியிருந்தார். இதில் வினித்ரா மேனன், அஷ்வின் மற்றும் தினேஷ் பாண்டியர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம், ஆஹா தளத்தில் நாளை வெளியாகிறது. 

குனேகார்:

மர்டர்-மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள படம், குனேகார். இந்த படத்தில், ஸ்வேதா பாசு, ஆகார்ஷ் குரானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம், ஜீ 5 தளத்தில் நாளை வெளியாகிறது. 

ப்ளட் ஹவுண்ட்ஸ்:

கொரியன் படம் என்றால், அதில் விறுவிறுப்பான திரைக்கதைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் மிஸ்டரி த்ரில்லர் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி பலரது எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நாளை வெளியாகவுள்ள படம்தான், ப்ளட் ஹவுண்ட்ஸ். இந்த படம், நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

மேலும் படிக்க | புது இராமாயண கதையில் இராவணனாக ‘ராக்கி பாய்’ யஷ்! ராமன்-சீதை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News