தேர்தலுக்கு முன் PM Narendra Modi வெளியாக வாய்ப்பில்லை...

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள PM Narendra Modi திரைப்படத்தை மக்களை தேர்தலுக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது!

Last Updated : Apr 25, 2019, 03:21 PM IST
தேர்தலுக்கு முன் PM Narendra Modi வெளியாக வாய்ப்பில்லை... title=

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள PM Narendra Modi திரைப்படத்தை மக்களை தேர்தலுக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது!

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. 

இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் முன்னதாக கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. 23 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் மக்களவை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே இந்த திரைப்படத்தினை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன. 

இதனையடுத்து இத்திரைப்படதைத வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவிற்கு பின்னர் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி-யின் வாழ்க்கை வரலாற்று மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படத்தின் ட்ரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!

மேற்கு வங்க முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அவர்களின் வாழ்க்கையினை தழுவிய Baghini- Bengal Tigress திரைப்படம் வரும் மே 3-ஆம் நாள் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் மம்தா பானர்ஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இல்லை எனவும், அவரின் வாழ்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை எனவும் இத்திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் பின்கி பால் தெரிவித்துள்ளார். 

எனினும் இத்திரைப்படமானது மக்களவை தேர்தலின் மையப்பகுதியில் வருவதால் வரும் தேர்தலில் இத்திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மேற்கு வங்க மாநில பாஜக துணை தலைவர் ஜோய் பிரகாஷ் மஜூம்தா வலியுறுத்தி வருகின்றார். 

Trending News