கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலான அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குநர் மணி ரத்னத்தின் பெரும் முயற்சியால், உருவாக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் தொடங்கியுள்ளது படக்குழு.
மேலும் படிக்க | சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்
முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அண்மையில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தது படக்குழு. இப்போது முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்னும் மூன்றே நாட்களில் அதாவது ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவித்துள்ளது. ’பொன்னி நதி’ என்ற பெயரில் முதல் சிங்கிள் உருவாகியிருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க படம் என்பதால், ஏ.ஆர்.ரகுமான், பல ஆய்வுகளின் அடிப்படையில் இசைக்கருவிகளை கண்டுபிடித்து இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளாராம். டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். முக்கிய கதாப்பாத்திரங்களில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெய்ராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். இரண்டு பாகமாக படம் உருவாகியிருக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகிறது.
மேலும் படிக்க | மணிரத்னத்துக்கு போட்டியாக ராஜமௌலி எடுக்கப்போகும் ‘மகாபாரதம்’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ