கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தொடக்க நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றனர். கடந்த முறை 18 போட்டியாளர்களை இறக்கிய பிக்பாஸ் டீம், இந்த முறையும் அதே அளவு போட்டியாளர்களை களமிறக்க இருக்கிறது. வழக்கம்போல் வெள்ளித்திரை, சின்னத்திரை, கிராமிய கலைஞர்கள், மாடல், ஸ்போர்ட்ஸ் என களமிறக்கும் பிக்பாஸ் டீம், இந்த முறை கூடுதலாக யூ டியூப் பிரபலங்களையும் களமிறக்க முடிவு செய்திருக்கிறது.
அதற்காக பிரபல யூ டியூபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்திருக்கிறதாம் பிக்பாஸ் டீம். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் பரவியது. ஆனால், கடைசி நேரத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார். அவருக்கு பதிலாக மற்றொரு யூடியூப் பிரபலம் மற்றும் சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த அபிஷேக்கை பிக்பாஸ் டீம் களமிறக்கியது.
பிக்பாஸ் கடுமையாக விமர்சித்த ஒருவர் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நல்ல வரவேற்பையும் பெற்றது. அந்த ரெஸ்பான்ஸை இந்த முறையும் தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பிக்பாஸ் டீம், வெளிநாட்டை சேர்ந்த பிக்பாஸ் விமர்சகரை களமிறக்க முடிவு செய்திருக்கிறதாம். ’கிறிஸ்’ என பெயர் ஆரம்பிக்கும் அவர் ஓகே சொல்லிவிட்டாரா? என தெரியவில்லை. இருப்பினும் அவர் பங்கேற்பது ஓரளவுக்கு முடிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல யூடியூபர், பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிபவரையும் களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு அண்மையில் தான் திருமணமும் நடைபெற்றது. இதனால் அவர் பங்கேற்பாரா? இல்லையா? என்பதை இப்போது வரை பரம ரகசியமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் சுவாரஸ்யமான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறது பிக்பாஸ் டீம். இதனால் சண்டைக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ