பிரபாஸின் சலார் ஒரு ரீமேக் படமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2023, 08:24 AM IST
  • டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் சலார்.
  • பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர்.
  • கேஜிஎப் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரபாஸின் சலார் ஒரு ரீமேக் படமா? வெளியான அதிர்ச்சி தகவல்! title=

சலார் படம் அதன் அறிவிப்பு  வெளியான காலத்திலிருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்குகிறார். 'சலார்' படம் உண்மையில் 2014ல் பிரசாந்த் நீல் இயக்கிய கன்னடப் படமான 'உக்ரம்' படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று தொடர்ந்து வதந்திகள் உள்ளன. உக்ரம் படம் ஒடியா மற்றும் மராத்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 'சலார்' படம் 'உக்ரம்' படத்தின் ரீமேக்கா இல்லையா என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரிடம் ‘சலார்’ படம் ‘உக்ரம்’ படத்தின் ரீமேக்கான வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, ‘ இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் அதை எப்படிச் செய்தாலும், நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.  ஆனால், இந்த பேட்டி சமீபத்தியதா அல்லது பழையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க | 'லியோ' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்யுமா? லோகேஷ் கனகராஜ் பதில்!

இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, 'உக்ரம்' மற்றும் 'சலார்' ஆகிய இரண்டு படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். ஒரு பழைய நேர்காணலில், அவர் தனது படம் எடுக்கும் பாணியில் உக்ரம் கண்டிப்பாக இருக்கலாம் என்றும், ஆனால் 'சலார்' ஒரு புதிய கதை மற்றும் 'உக்ரம்' படத்தின் ரீமேக் அல்லது தழுவல் இல்லை என்றும் கூறியுள்ளார்.  சலார் படத்தின் டீஸர்கள் மற்றும் போஸ்டர்கள் கேஜிஎஃப் படத்தின் மற்றொரு பாகத்தை போல் இருந்தாலும், பிரசாந்த் நீல் இந்த விஷயத்தில் கூடுதல் விளக்கத்தை வழங்கவில்லை. எனவே, 'சலார்' படத்திற்கு 'உக்ரம்' தொடர்புடையதா இல்லையா என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது. யூடியூப்பில் இருந்து 'உக்ரம்' படம் நீக்கப்பட்டதாக வதந்திகள் வந்தன, ஆனால் இன்னும் படத்தின் ஹிந்தி-டப்பிங் பதிப்பு உட்பட மற்ற முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் காணலாம்.

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த படம் ஷாருக்கானின் 'டன்கி' படத்துடன் மோத உள்ளது. சலார் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் 'சலார்' மற்றும் 'உக்ரம்' இடையே ஒப்பீடுகளை எடுத்து சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். முன்னதாக சலார் படத்தை செப்டம்பர் 28 அன்று வெளியிடப்பட திட்டமிட்டு இருந்த படக்குழு பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியாத காரணத்தால் டிசம்பர் மாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சலார் படம் தொடர்பாக வெளியான சமீபத்திய அப்டேட்டில், இயக்குனர் பிரஷாந்த் நீல் படத்தின் கிளைமாக்ஸ் உட்பட சில காட்சிகளை மீண்டும் படமாக்குவதற்காக படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பட குழுவினரை மீண்டும் சந்தித்துள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு பார்த்த போது, சில காட்சிகளை இன்னும் மெருகேற்றலாம் என்று இயக்குனருக்கு தோன்றி உள்ளது.  எனவே தான் கிளைமாக்சில் சில காட்சிகளை மீண்டும் படமாக்கி உள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.  

மேலும் படிக்க | லியோ படம் LCUவில் வருமா? வராதா? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News