ஆஸ்கர் விருதுக்கு "புலிமுருகன்" பாடல்கள் தேர்வு!

90-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துறைப் பட்டியலில் 'ஒரிஜினல் பாடல்கள்' பிரிவில் 70 பாடல்கள் தேர்வாகியுள்ளன

Last Updated : Dec 21, 2017, 02:29 PM IST
ஆஸ்கர் விருதுக்கு "புலிமுருகன்" பாடல்கள் தேர்வு!

மலையள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'புலிமுருகன்' படத்தில் இடப்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துறைக்கப் பட்டுள்ளது!

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'புலிமுருகன்' திரைப்படம் வெளியானது. இயக்குனர் வைஷாக் இயக்க மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

பெரும் பொருட்செலவில் வெளியான இந்ந திரைப்படம் மலையாளத்தில் அதிக வசூல் பெற்று சாதனை படைத்தது. 

இந்நிலையில், 90-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துறைப் பட்டியலில் 'ஒரிஜினல் பாடல்கள்' பிரிவில் 70 பாடல்கள் தேர்வாகியுள்ளன. 

இந்த பட்டியலில் புலிமுருகன் திரைப்படத்தின் காடனயும் கால்சிலம்பே, மானத்தே மரிகுரும்பே இரண்டு பாடல்கள் இடப்பெற்றுள்ளன. 

More Stories

Trending News