ஆஸ்கர் ரேஸில் ஜூனியர் என்டிஆர் - ராஜமௌலி; அடுத்த சரித்திரத்துக்கு தயாராகும் ஆர்ஆர்ஆர்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படதிற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல நாளிதழான வெரைட்டி தெரிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2022, 04:13 PM IST
  • ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மகுடம்
  • ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு என தகவல்
  • பிரபல ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது
ஆஸ்கர் ரேஸில் ஜூனியர் என்டிஆர் - ராஜமௌலி; அடுத்த சரித்திரத்துக்கு தயாராகும் ஆர்ஆர்ஆர் title=

பாகுபாலியின் இரண்டு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். முந்தைய இரண்டு படங்களும் வசூலில் ராஜ்ஜியம் படைத்ததால், அந்தப் படங்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் ஆர்ஆர்ஆர் படம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராஜமௌலி, பிரம்மாண்டமாக படத்தை உருவாக்கினார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ், ஷ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். 

சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம்பீம் மற்றும் சீதாராமராஜு ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து பீரியட் பிலிமாக ஆர்ஆர்ஆர் உருவானது.  கொமரம்பீமாக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராமராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர். பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டது. ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராக இருந்த சமயத்தில் தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. இதனால் 2 ஆண்டுகளாக பல்வேறு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. என்ன ஆனாலும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் படக்குழு திட்டவட்டமாக இருந்தது. அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் தியேட்டரில் பான் இந்தியா படமாக ரிலீஸான ஆர்ஆர்ஆர் வசூல் சாதனை படைத்தது. 

மேலும் படிக்க | ரஜினியை கொண்டாடி கமலை திட்டும் ரசிகர்கள்; காரணம் இதுதான்

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக் குவித்தது. இந்திய அளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலில் ஏற்கனவே பாகுபலி படங்கள் இருக்கும் நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படமும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலித்த இந்திய திரைப்படங்கள் மொத்தம் மூன்று மட்டுமே. டங்கல் மற்றும் பாகுபலி படங்களுக்கு அடுத்தபடியாக ராஜமௌலியின் இந்தப் படமான ஆர்ஆர்ஆர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்துக்குப் இப்போது இன்னொரு மகுடம் கிடைக்க இருப்பதாக பிரபல நாளிதழான வெரைட்டி குறிப்பிட்டுள்ளது. ஆஸ்கர் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகராக ஜூனியர் என்டிஆர், மற்றும் சிறந்த படம் ஆகிய லிஸ்டில் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. விருது கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | கதாநாயகிகளுக்கு சம்பளமே இல்லை - புலம்பும் தமன்னா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News