சொகுசு காரில் மகளுடன் உலா வந்த Super Star: வைரலாகும் வீடியோ!!

சூப்பர் ஸ்டார் ஒரு வெள்ளை மாஸ்கை அணிந்துகொண்டு தனது மகள் சௌந்தர்யாவின் லம்போர்கினி காரை ஓட்டிக்கொண்டு செல்லும் படமும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2020, 02:30 PM IST
  • சூப்பர் ஸ்டாரின் வீடியோ வைரல்.
  • காரில் தன் மகளுடன் காணப்பட்டார் ரஜினி.
  • முகத்தில் வெள்ளை மாஸ்குடன் காணப்பட்ட சூப்பர் ஸ்டார்.
சொகுசு காரில் மகளுடன் உலா வந்த Super Star: வைரலாகும் வீடியோ!! title=

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் இதுதான்!! அவர் ஒரு வெள்ளை மாஸ்கை அணிந்துகொண்டு தனது மகள் சௌந்தர்யாவின் லம்போர்கினி காரை ஓட்டிக்கொண்டு செல்லும் படமும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

ரஜினியின் மகள் சௌந்தர்யா (Soundarya Rajinikanth) காரில் அமர்ந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி (Super star Rajini) காரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ரஜினி ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டு செல்லும் இந்த படம் ட்விட்டரையும் இணயத்தையும் கலக்கியது.

இது கொரோனா காலம் என்பதால் சூப்பர் ஸ்டார் முறையாக மாஸ்க் அணிந்து தனி மனித இடைவெளியையும் கடைபிடிப்பதைக் காண முடிகிறது.

 

ALSO READ: விருமாண்டி 2-வில் அஜித் நடிக்கிறாரா? வைரலாகும் போஸ்டர்!!

இதற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸின் 'தர்பார்' படத்தில் ரஜினி நடித்தார். இதில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அடுத்து, சிவா எழுதி இயக்கிவரும் 'அண்ணாத்தே’ (Annatthe) படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதி, ரஜினியுடன் மீனா, குஷ்பூ சுந்தர், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் மற்றும் வேலா ராமமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

Trending News