கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?

குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 01:08 PM IST
கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா? title=

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விருமன்'.  2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.  இந்த படம் ஆகஸ்ட்-12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, கடந்த ஆகஸ்ட்-3ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  அடுத்ததாக படத்தின் ப்ரோமோஷனுக்காக கார்த்தி மற்றும் அதிதி இருவரும் மலேசியா சென்றனர்.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விருமன் படக்குழு கலந்துகொண்டது.  அப்போது பேசிய இயக்குனர் ராஜு முருகன் தான் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக தெரிவித்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த இருவரும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும் ராஜு முருகன் விருமன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  தற்போது கார்த்தி 'விருமன்' மற்றும் மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

மேலும் படிக்க | கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் இயக்குனர் இவரா?

ராஜு முருகன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான 'குக்கூ' படம், 2016ம் ஆண்டு குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான 'ஜோக்கர்' படம் மற்றும் 2020ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் வெளியான 'ஜிப்ஸி' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கார்த்தியுடன் இவர் இணையப்போகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

rajumurugan

மேலும் படிக்க | முதலில் தெருக்குரல் அறிவு இப்போ ராஜலட்சுமி: தமிழ் சினிமாவில் தலைதூக்கும் Nepotism?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News