‘சண்டக்கோழி-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. 

Last Updated : Dec 28, 2017, 01:02 PM IST
‘சண்டக்கோழி-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! title=

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. 

முதல் பாகத்தின் ஹிட்க்குப் பிறக 2-ம் பாகம் துவக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கூறி இருந்தார்.

அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடுகிறார். இது விஷாலின் 25-வது படமாம். வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

 

Trending News