ஸ்ரீதேவிக்கு இதுவரை மாரடைப்பு வந்ததில்லை என்றும் மேலும் அவர் இறப்புக்கான காரணம் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளாக இருக்கலாம் என்றும் அவருடைய உறவினர் சஞ்சய் கபூர் தெரிவித்தார்.
80-களில் மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு இன்று வரை ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையினால் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவார்.
5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் உறவினர் மோஹித் மார்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கணவர் போனி கபூர் மற்று்ம மகள் குஷியுடன் சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள நிலையில், அவருக்கு நேற்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. உடல் நேற்று இரவே மும்பை வருவதாக இருந்தது. ஆனால் உடற்கூறு ஆய்வில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று அவரது உடல் வருகிறது.
மேலும் நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சிலரும் மும்பைக்கு விரைந்துள்ளனர்.
அவர் பொரித்த உணவுகளை சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகிறதாம். இந்நிலையில் அவருக்கு இதற்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதில்லை என்று அவரது கொழுந்தனார் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். அவர் முகத்தில் சுருக்கங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும் தன் அழகை மெருகூட்டவும் 6 முறை பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துள்ளார்.
அவர் எப்போது இளமையாகவே இருக்கவும் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக அவரை 40 வயதுக்கும் குறைந்த வயதுடைய பெண்ணாக இருப்பதற்காகபல மருந்து மருந்துகளை உட்கொண்டதாகவும் இவையே அவரது உயிரை குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரின் மரணம் குறித்து பேசியுள்ள ஸ்ரீ தேவியின் நெருங்கிய உறவினர் சஞ்சய்கபூர், இதுவரை ஸ்ரீ தேவிக்கு மாரடைப்பு வந்ததில்லை என்றும், இவருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் வயதானாலும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என அவர் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சைகள் என கூறியுள்ளார்.