சீதா ராமன் அப்டேட்: கர்ப்பமான சீதா.. உற்சாகத்தில் ராம், மகா எடுத்த முடிவு

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 19, 2023, 03:27 PM IST
  • மகா டீமுக்கு அதிர்ச்சி.
  • ராமிடம் போனில் பேசும் சீதா
  • மந்திரவாதியிடம் செல்லும் மகா.
சீதா ராமன் அப்டேட்: கர்ப்பமான சீதா.. உற்சாகத்தில் ராம், மகா எடுத்த முடிவு  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மகா டீமுக்கு அதிர்ச்சி

அதாவது டாக்டர் சீதா கர்ப்பமாக இருப்பதாக சொல்ல மகா டீம் அதிர்ச்சி அடைகிறது. அதனை தொடர்ந்து சேது ராமுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அதை கேட்ட அவன் உற்சாகமடைகிறான். பிறகு மகா, அர்ச்சனா என ஒவ்வொருத்தராக போனை வாங்கி வாழ்த்து சொல்ல உங்களை நம்பி தான் சீதாவை விட்டுட்டு வந்திருக்கேன், பத்திரமாக பாத்துக்கங்க என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | கிரைம், திரில்லராக உருவான “அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா

ராமிடம் போனில் பேசும் சீதா

பிறகு சீதாவிடம் பேச ராம் ஆசைப்பட சுபாஷ் போனை கொடுக்க சீதா வெட்கப்பட்டு வாங்காமல் நிற்க திரும்பவும் மகா வாங்கி பேசுகிறாள். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் சேது பட்டாசு வெடித்து சீதாவை வரவேற்க மீரா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வருகிறாள். 

மந்திரவாதியிடம் செல்லும் மகா

அதனை தொடர்ந்து மகா, அர்ச்சனா, கல்பனா ஆகியோர் திரும்பவும் சாமியாரை சந்திக்க அவர் என்ன பண்ணனும் என்று கேட்க அர்ச்சனா கருவை கலைத்து விட சொல்கிறாள். ஆனால் மகா அதெல்லாம் பண்ண வேண்டாம் அவங்களை பிரித்தால் மட்டும் போதும் என்று சொல்ல மந்திரவாதி கூடிய விரைவில் அவங்க பிரிந்திடுவாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.  அடுத்து சீதா ராமுக்கு போன் செய்து சந்தோஷத்தில் கண் கலங்குகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | வெறும் இரண்டே படம்.. கோடிகளில் சம்பளத்தை வாங்கும் நடிகை மிருணாள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News