சீதா ராமன்: நான்சிக்கு நாக்கு தள்ளுது‌‌.. சீதா வைத்த செக்மேட், சேது சொன்ன வார்த்தை

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 11, 2024, 02:54 PM IST
  • சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சீதா ராமன்: நான்சிக்கு நாக்கு தள்ளுது‌‌.. சீதா வைத்த செக்மேட், சேது சொன்ன வார்த்தை title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதா சவாலை நிறைவேற்ற அதற்கான முயற்சிகளை எடுக்க நான்சி சதி வேலைகள் செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | படுக்கையறையில் படுத்தவாறு போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! புகைப்படங்கள் வைரல்..

அதாவது, சீதா முத்தாரம்மன் கும்பிட்டுக் கொண்டிருக்க அங்கு வந்து சேது இதுக்கு மேல சாமி கும்பிட்டுட்டு இருக்க இனி எதுவுமே நடக்கப்போவதில்லை எல்லாமே முடிஞ்சு போச்சு என சொல்ல சீதா கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும் என சொல்கிறாள். 

சேதுவை தொடர்ந்து மீராவும் அங்கு வந்து அதையே சொல்ல சீதா மகாவோட கல்லறைக்கு போகணும் என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து சீதா வாடகைக்கு இருந்த வீட்டுக்கு வந்து அங்கு மகளிர் குழு தலைவியை சந்தித்து டெய்லர்கள் வேணும் என கேட்க அவர் ஏற்பாடு செய்து தருவதாக சொல்கிறார். 

இந்த விஷயம் அறிந்த மீராவும் சேதுவும் அவங்களால எல்லாம் தைக்க முடியாது என சொல்கின்றனர். அதன் பிறகு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு செல்ல அந்த கம்பெனி பூட்டு போட்டு இருக்கிறது. பிறகு ஓனரிடம் பேச அவர் மிஷின் இருக்கு ஆனா டெய்லர்கள் இல்லை என்று சொன்ன டெய்லர்களை நாங்கள் கூட்டிட்டு வரோம் என சொல்லி வீட்டுக்கு வருகிறாள். 

சேதுவிடம் எல்லா ஏற்பாடுகளும் தயார் என சொல்ல நான்சி மற்றும் மற்றும் அர்ச்சனா அந்த வழியாக வர இவர்கள் பேசுவது கேட்காத காரணத்தினால் நான்சி அர்ச்சனாவை உள்ளே அனுப்பி வைக்க அர்ச்சனா வந்ததும் இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர். பிறகு சுபாஷ் வந்து பேச்சு கொடுத்து விஷயத்தை அறிய முயற்சி செய்ய அதுவும் தோல்வியில் முடிவடைகிறது. 

இதைத்தொடர்ந்து மகளிர் குழுவை சேர்ந்த டெய்லர்கள் சீதா வீட்டிற்கு வந்து இந்த சவாலில் நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம் என சீதாவுடன் கைகோர்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Oscar 2024 List : ஆஸ்கர் விருதுகளின் வெற்றியாளர்கள் யார்? எந்த படத்திற்கு என்ன விருது கிடைத்தது? முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News