சீதா ராமன் அப்டேட்: ராம், மது இடையே ஏற்படும் நெருக்கம்.. சீதா கண்ட அதிர்ச்சி காட்சி!!

Seetha Raman Today's Episode Update: ராம், மது இடையே ஏற்படும் நெருக்கம்.. சீதா கண்ட அதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 13, 2023, 12:22 PM IST
  • கேரியரில் சாப்பாடு கட்டி கொண்டு ஆபிஸ் கிளம்பும் சீதா.
  • மதுமிதாவுக்கு ஸ்பூனில் ஊட்டி விடும் ராம்.
  • அதிர்ச்சி அடையும் சீதா.
சீதா ராமன் அப்டேட்: ராம், மது இடையே ஏற்படும் நெருக்கம்.. சீதா கண்ட அதிர்ச்சி காட்சி!! title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவின் பேச்சை கேட்டு மதுமிதா சூர்யாவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை கிழித்து போட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கேரியரில் சாப்பாடு கட்டி கொண்டு ஆபிஸ் கிளம்பும் சீதா

அதாவது மதுமிதா போட்டோவை கிழித்து போட்டதை பார்த்து மகா சந்தோசப்பட வீட்டில் சீதா உப்பு, காரம் எல்லாம் அதிகம் போட்டு ஒரு பெரிய கேரியரில் சாப்பாடு கட்டி கொண்டு ஆபிஸ் கிளம்பி வர செக்யூரிட்டியும் இவ்வளவு பெரிய கேரியரை எப்படி கொண்டு போவீங்க என உதவிக்கு வருகிறான். 

மதுமிதாவுக்கு கணக்கு வழக்குகளை சொல்லிக்கொடுக்கும் ராம்

இதையடுத்து ஆபிசில் ராமின் தங்கைகள் மதுமிதாவுக்கு மெகந்தி போட்டு விட ராம் அப்படியே அவளுக்கு கணக்கு வழக்குகளை சொல்லி கொடுக்கிறான்.

அதன் பிறகு சீதா ஆபிஸ் வருவதை cctv கேமராவில் பார்த்த மகா செக்யூரிட்டியிடம் அவ ஒரு பைத்தியம் அவளை உள்ள விடாதே என்று சொல்ல செக்யூரிட்டியும் சீதாவை தடுத்து நிறுத்த சீதா அதை மீறி உள்ளே நுழைகிறாள். 

மேலும் படடிக்க | கமலின் 10 கேரக்டர்கள்-விஷ்ணுவின் 10 அவதாரங்கள்..’தசாவதாரம்’ படத்தில் ஒளிந்துள்ள ரகசியம்!

அதிர்ச்சி அடையும் சீதா

இதை பார்த்த துரை சீதாவை நேராக பூஜையறைக்கு அழைத்து செல்ல அங்கு மது சூர்யா ஒன்றாக இருக்கும் போட்டோ கிழித்து போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு அங்கு வரும் மகா செக்யூரிட்டியை அழைத்து சீதாவை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கிறாள். 

மதுமிதாவுக்கு ஸ்பூனில் ஊட்டி விடும் ராம்

பிறகு சீதா மீண்டும் செக்யூரிட்டிக்கு ஐஸ் வைத்து ஆபிஸ்குள் நுழைய மகா ஓட்டலில் இருந்து சாப்பாட்டை வர வைத்து இருக்க மதுமிதா கையில் மெஹந்தி போட்டு இருந்ததால் ராம் அவளுக்கு ஸ்பூனில் ஊட்டி விடுகிறான்,

இதை நேரில் பார்த்த சீதா கலங்கி போய் நிற்க மகா இனியும் உனக்கு ராம் வேணுமானு யோசி, ஒழுங்கு மரியாதையா ஓடி போய்டு என மிரட்டுகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சிறுவயதிலேயே சினிமா-இசைப்புயலின் உறவினர்..ஜி.வி.பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News