Simbu new movie update: சிம்பு படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியீடு

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 க்கு வெளியாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 10:47 AM IST
Simbu new movie update: சிம்பு படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியீடு title=

நதிகளிலே நீராடும் சூரியன் என்ற டைட்டிலை கொண்டு அறிவிக்கப்பட்ட சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 க்கு வெளியாகிறது.

தனது உடல் எடையை மாற்றி மாஸாக ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் சிம்பு. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வெளியீட்டுக்காக வேளையில் அப்படக்குழு இறங்கியுள்ளது. சிம்புவின் (Simbu) 47வது படத்தை கவுதம் மேனன் (Gautham Vasudev Menon) இயக்குறார், ரகுமான் இசையமைக்கிறார் என்ற தகவல் நீண்ட நாட்களாகா வந்து கொண்டிருந்தது.

ALSO READ | 3:33 Teaser: சாண்டி மாஸ்டர் நடிக்கும் 3:33; திகில் ஏற்படுத்தும் டீசர்

இந்திலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் மேனன் பிறந்த நாளான 25-ம் தேதி இந்த படத்தை பற்றின அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தலைப்பை மாற்றி புதிய தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தை இன்று வரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்பு மற்றும் த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்தது இந்த திரைப்படம். அதனைத்தொடந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்தள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ALSO READ | Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News