தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் எஸ்.ஜே சூர்யா, சிம்பு, விஷால் , அதர்வா மற்றும் யோகி பாபு. இவர்கள், சம்பளத்தை வாங்கிவிட்டு கால்ஷீட் தராமால் இழுத்தடிப்பதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இவர்களுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
ரெட் கார்டு காண்பித்தால் என்ன நடக்கும்?
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களுக்கென உருவாக்கப்பட்டது, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதில், தயாரிப்பாளர்களுக்கு தேவையான விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு பிரச்சனைக்கு ஏற்றவாறான புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். இதில் நடிகர்களுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டால் அவர்களால் சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு அப்படி ரெட் கார்டு காண்பிக்கப்பட்டதால்தான் அவர் சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனது.
மேலும் படிக்க | வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு செல்லும் விக்கி? இவருக்கு இந்த நிலைமையா!
பொதுக்குழு கூட்டம்:
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.
5 நடிகர்களுக்கு ரெட் கார்டு:
தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிவிட்டால், அவர்களது படத்தில் நடிக்க நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக சில நடிகர்கள் நடந்து கொள்வதாக நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து அப்படி கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எஸ்.ஜே சூர்யா, அதர்வா, விஷால், யோகி பாபு, சிம்பு ஆகியோரின் பெயர்கள் உள்ளதாம்.
யார் மீது யார் புகார் கொடுத்தது?
நடிகர் சிம்பு மீது, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கொடுத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா மீது ஸ்டுடியோ கிரீன் உறுப்பினர் ஞானவேல் ராஜா புகார் கொடுத்துள்ளார். நடிகர் விஷால் மீது கே.பி.பிலிம்ஸ் பாலு புகாரளித்துள்ளார். அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக பார்க்கப்படும் யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்துள்ளார்களாம்.
விளக்கம் கொடுக்க வேண்டும்..
புகார் கொடுக்கப்பட்டுள்ள நடிகர்கள், விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. மேற்கூறிய லிஸ்டில் ஒரு சில நடிகர்களிடம் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை வைத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யப்பட இருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் இருந்து வந்த தகவலில் கூறப்படுள்ளது. அப்படி சரியான விளக்கம் இல்லை என்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமாம். லிஸ்டில் உள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தின் நிதிஅயை சரியாக கையாளாத காரணத்திற்காக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிக்கும் வாய்ப்பை இழப்பார்களா?
இதற்கு முன்னர், நடிகர் வடிவேலு மீது பிரபல தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் சங்கரும் அளித்த புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டு சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, அந்த ரெட் கார்டு நீக்கப்பட்டு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இதே போன்ற நிலை சிம்பு, விஷால், யோகி பாபு, அதர்வா மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோருக்கு வருமா என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். இவர்களது விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கண்டிப்பாக ரெட் கார்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிரபல ராப் பாடகர் மேடையில் மயங்கி விழுந்து மர்ம மரணம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ