விரைவில்!! அரசியல் களத்தில் இருபெரும் நண்பர்கள்!!

Last Updated : Sep 22, 2017, 04:02 PM IST
விரைவில்!! அரசியல் களத்தில் இருபெரும் நண்பர்கள்!!

வரைவில் தமிழக அரசியல் களம் காண உள்ள இரு பெரும் நடிகர்கள், நண்பர்களான கமல் மற்றும் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருகிறார் என செய்திகள் வந்தது. அதனையடுத்து, அவரது ரசிகர்களை சந்தித்த போது போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசத்தை குறித்து கருத்து தெரிவித்தார். பிறகு பல தலைவர்கள் அவரை சந்தித்து பேசினார்கள்.   

அதேவேளையில், உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி கோட்டையை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் தேர்தல் வந்தால், அதில் என்னுடைய பங்கு இருக்கும் எனவும், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

விரைவில் அரசியல் களத்துக்குள் யார்? வர போகிறார் என்பது குறித்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

More Stories

Trending News