‘வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்’... அனுஷ்கா சர்மா - விராட் கோலி வீடியோ செய்தி

பிரபல தம்பதியினரான அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில் அனைவரையும் ‘வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 20, 2020, 12:11 PM IST
‘வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்’... அனுஷ்கா சர்மா - விராட் கோலி வீடியோ செய்தி title=

புது டெல்லி: நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில் அதில் நாட்டு மக்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். அதில் ‘வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மக்கள் யாரும் பொது வெளியில் அதிக அளவில் நடமாட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. 

மத்திய மற்றும் மாநில அரசுக்கள் தங்கள் ஊழியர்களில் 50 சதவீத பேரை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு உத்தரவிட்டு உள்ளது. அதேபோல பல தனியார் நிறுவனங்களும் தங்கள் வேலையாட்களை வீட்டிலேயே இருந்து பணி செய்ய அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் ஒருபகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ஜனதா ஊரடங்கு (Janta Curfew) உத்தரவைப் பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார்.

இதற்கு மத்தியில் பிரபல தம்பதியினரான அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில் அனைவரையும் ‘வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் பகிர்ந்து கொண்ட அந்த வீடியோ, “வீட்டில் இருங்கள். பத்திரமாக இருக்கவும். ஆரோக்கியமாக இருங்கள்” வைரஸ் பரவாமல் தடுக்க நீங்களும் அதைச் செய்ய வேண்டும்” என அனுஷ்கா ட்வீட் செய்திருந்தார். 

 

தனது மனைவியின் செய்தியை மேற்கோள் காட்டி விராட் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசாங்கத்தின் கட்டளையை முற்றிலும் மதித்து பின்பற்றுவதே காலத்தின் தேவை. வீட்டில் பத்திரமாக இருக்கவும். ஆரோக்கியமாகவும் இருக்கவும்” என்று கூறியுள்ளார்.

Trending News