சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

கடந்த செப்டம்பர் மாதம் காரைக்குடியில் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பை 51 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி முடித்தது படக்குழு.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 10, 2021, 04:14 PM IST
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திர நடிகர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை அறிவித்து நடித்துக் கொண்டிருப்பவர் சூர்யா.  சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் ஜெய் பீம் கடந்த 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா (Suriya) நடிப்பில் உருவாகும் படம் 'எதற்கும் துணிந்தவன்' (Etharkkum Thunindhavan). சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு, மீண்டும் தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் காரைக்குடியில் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பை 51 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி முடித்தது படக்குழு.

ALSO READ | First Look #எதற்கும்துணிந்தவன்! வெளியானது சூர்யா 40  படத்தின் பர்ஸ்ட் லுக்!

இந்நிலையில் தற்போது இன்று 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் எங்கள் ஹீரோ சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கும் எனது குழுவினர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி என்றும் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இதில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி "வாடிவாசல்" திரைப்படத்தின் டைடில் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News