Viral: 70 வயது பாட்டியாக வலம்வரும் நடிகை சமந்தா....

நடிகை சமந்தா தனது அடுத்த படத்தில் 70 வயது பாட்டியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2018, 12:48 PM IST
Viral: 70 வயது பாட்டியாக வலம்வரும் நடிகை சமந்தா.... title=

நடிகை சமந்தா தனது அடுத்த படத்தில் 70 வயது பாட்டியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் யூ-டர்ன் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். தவிர, நாக சைத்தன்யாவுடன் இணைந்து, ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தற்போது இவரின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 'மிஸ் கிரான்னி' என்ற கொரிய படத்தின் ரீமேக்காக அது உருவாகிறதாம். போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்து விடுவது தாம் மிஸ் கிரானி படத்தில் மையக்கரு.

அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். 70 வயது பாட்டியாக வேறொரு பழம்பெரும் நடிகை நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது. 

 

Trending News