ஷாரூக்கானுக்கு ஜோடியான தமிழ் நடிகை - அட்லி சூட்டிங் அப்டேட் இதோ

அட்லி படத்தின் சூட்டிங்கை ஷாரூக்கான் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2022, 03:04 PM IST
  • அட்லி - ஷாரூக்கான் படத்தின் சூட்டிங் நிறைவு
  • புதிய படத்தில் நடிக்க கிளம்பிய ஷாரூக்கான்
  • டாப்ஸி ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்
ஷாரூக்கானுக்கு ஜோடியான தமிழ் நடிகை - அட்லி சூட்டிங் அப்டேட் இதோ title=

சில வருடங்கள் வெள்ளித்திரையில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு, ஷாருக்கான் மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாகியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸின் பதான் படத்தை நிறைவு செய்த அவர், அட்லியின் அடுத்த படத்திலும் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து இன்னொரு புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகி, சூட்டிங்கிலும் பங்கேற்க தொடங்கிவிடாராம்.

லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவல்படி,  ஷாரூக்கான் அட்லியின் படத்தின் சூட்டிங்கை கடந்த வாரமே நிறைவு செய்துவிட்டாராம். அந்த சூட்டிங்கை முடித்தபிறகு ராஜ்குமார் ஹிரானியுடன் தனது அடுத்த படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். அதாவது புதன்கிழமை முதல் எஸ்ஆர்கே ராஜ்குமார் ஹிரானியின் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் பஞ்சாப்பில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நெல்சன் வேண்டுமா வேண்டாமா... ரஜினியை முடிவெடுக்க சொன்ன சன் பிக்சர்ஸ்?

பஞ்சாப்பில் ஒரு குடும்பத்தினர் குடியேறுவதற்காக சந்திக்கும் பிரச்சனையை மையமாக க்கொண்டு இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். புதாபெஸ்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பதாக கூறப்படுகிறது

அட்லி - ஷாருக்கானின் ‘லயன்’ படத்தில் நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சர்பிரைஸ் கொடுத்த யாஷ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News