சத்ரியன் படத்தின் பாடல் வெளியீடு!!

Last Updated : Jan 31, 2017, 03:53 PM IST
சத்ரியன் படத்தின் பாடல் வெளியீடு!! title=

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'சத்ரியன்' படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. 

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபுவுடன் கைகோர்த்திருக்கும் படம் சத்ரியன். இப்படத்தின் பாடல்களின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நாயகியாக மஞ்சிமா மோகன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். 

இசைவெளியிட்டு விழாவில் நடிகர் விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அமீன் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு இப்படத்திற்கு "முடிசூடா மன்னன்" என்று தலைப்பும் உறுதிசெய்யப்பட்ட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News