விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்

கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில், அவரது கேரக்டர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2022, 10:45 AM IST
  • விக்ரம் படதின் இசை வெளியீட்டு விழா
  • மே 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது
  • சூர்யாவின் சிறப்புத்தோற்றம் குறித்த தகவல் லீக்
விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல் title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் ஷிவானி, நரேன் காளிதாஸ், ஜெயராம், தொகுப்பாளினி மகேஸ்வரி, மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், சில காட்சிகள் மட்டும் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்தப் படப்பிடிப்பும் ஒரு சில நாட்களில் நிறைவு பெற இருக்கிறது.

இதற்கிடையே பட புரமோஷன் நிகழ்ச்சிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் 3 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், மே 15 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால், படத்தின் அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கின்றனர்.

மேலும்படிக்க | ‘பாபா’வில் ரஜினிக்கு நேர்ந்தது இன்று சிரஞ்சீவிக்கு! - நஷ்ட ஈடு கொடுக்கத் தயார்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழு ரகசியம் காத்து வந்த நிலையில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கமல்ஹாசனும், நடிகர் சூர்யாவும் விக்ரம் செட்டில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் வீடியோ வெளியானதை பார்த்ததும் ரசிகர்கள், யூகத்தை உறுதி செய்துவிட்டனர். சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தாலும், அவர் என்ன கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

கமல் ஹாசனின் மகனாக அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இன்னும் பல சஸ்பென்ஸ்கள் விக்ரம் படத்தில் இருக்கிறதாம். இந்த சஸ்பென்ஸூகளின் அப்டேட் நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு வெளியிடுகிறதாம்.  மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே ரிலீஸான ‘விக்ரம்’ படத்தின் சில காட்சிகளும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். 

மேலும் படிக்க | ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News