இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்!

மே-6ம் தேதியன்று தமிழ் மட்டுமல்லாது பிறமொழி படங்களும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 05:16 PM IST
  • சாணிக்காயிதம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
  • பஹத் பாசில் நடிப்பில் உருவான படம் 'டான்காடா' ஆஹாவில் வெளியாகிறது.
  • மொத்தம் 7 படங்கள் இந்த வாரம் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்! title=

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாணிக்காயிதம்'.  இப்படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடித்துள்ளனர், இந்த படத்தில் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர்.  இயக்குனராக இருந்து வந்த செல்வராகவன் தற்போது நடிகராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார், 1980களில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் மே-6ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகுகிறது.  

மேலும் படிக்க | பாலிவுட் டிவி நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவித்த டிடி!

அடுத்ததாக அருண் கார்த்திக் இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான படம் 'நஸீர்'.  சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு புடவை விற்பனையாளரின் வாழ்வில் திடீரென்று ஒரு நாள் எதிர்பார்த்தவிதமாக நடக்கும் சம்பவம் பற்றி இந்த கதை அமைந்துள்ளது.  இந்த படம் சோனி லீவ் ஓடிடி இயங்குதளத்தில் மே-6ம் தேதி வெளியாகுகிறது.

nasir

நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் உருவான ஹிந்தி மொழி திரைப்படம் 'ஜூண்ட்'.  என்ஜிஓ ஸ்லம் சங்கரின் நிறுவனர் விஜய் பார்ஸியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அமிதாப் பச்சன், ரிங்கு ராஜகுரு, அங்குஷ் கேதம், ஆகாஷ் தோஸர் போன்ற பலர் நடித்துள்ளனர்.  மார்ச் 4ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் மே-6ம் தேதி வெளியாகுகிறது.  அதனை தொடர்ந்து ராஜ் சிங்க் சவுதாரி இயக்கத்தில் உருவான ஹிந்தி மொழி படம் 'தார்'.  ஒருவன்  பெரிய நகரத்திற்கு வேலைக்காக சென்று அங்கு தனது கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்களுக்கு பழிவாங்குவதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.  இந்த படம் மே-6ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி இயங்குதளத்தி வெளியாகுகிறது.

thar

திலீஷ் போத்தன் இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவான படம் 'டான்காடா'.  கலப்பு திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி அவர்களது வாழ்வில் சந்திக்கும் சில இன்னல்களை பற்றி இப்படம் விளக்குகிறது.  இந்த படம் மே-6ம் தேதி 'ஆஹா' ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகுகிறது.  மேலும் சத்ய பிரகாஷ் இயக்கத்தில் உருவான கன்னட மொழி திரைப்படமான 'மேன் ஆஃப் தி மேட்ச்' மே-6ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகுகிறது.  அதேபோல லூயிஸ் லெடிரியர் இயக்கத்தில் உருவான ஆங்கில மொழித்திரைப்படமான 'தி டேக் டவுன்' மே-6ம் தேதி நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகுகிறது.

மேலும் படிக்க | காத்துவாக்குல வெளியான ’டான்’ படத்தின் சீக்ரெட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News