Vijayakanth: GOAT படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த்?

Vijayakanth In GOAT Movie: நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2024, 12:46 PM IST
  • விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம், GOAT.
  • வெங்கட் பிரபு இயக்கும் படம் இது.
  • இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இருப்பதாக தகவல்.
Vijayakanth: GOAT படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த்?  title=

Vijayakanth AI In Venkat Prabhu Thalapathy Vijay GOAT Movie: அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய், தற்போது தனது 68வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘Greatest Of All Time’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய்க்கு நெருக்கமான விஜயகாந்த்..!

‘புரட்சி கலைஞர்’ என்று மக்களால் பாசமாக அழைக்கப்படுபவர், நடிகர் விஜயகாந்த். நடிகராகவும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவராகவும் விளங்கிய இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரை மறைவு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் என பல கோடி பேரை சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்திற்கு நெருக்கமான பிரபலங்களுள் ஒருவர், நடிகர் விஜய். ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜய்யும் விஜயகாந்தும் அண்ணன்-தம்பியாக நடித்துள்ளனர். படங்களில் மட்டுமன்றி, இயல்பு வாழ்க்கையிலும் இருவரும் அண்ணன் தம்பியாகவே பழகி வந்தனர். 

GOAT படத்தில் விஜயகாந்த்?

நடிகர் விஜய், முழு நேர அரசியலில் இறங்குவதற்கு முன்னர், கடைசியாக கமிட் ஆகியிருக்கும் படத்தில் நடித்து கொடுத்துவிட்டு, மக்கள் பணியில் இறங்க உள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்து வரும் GOAT படத்தில் நடிகர் விஜயகாந்த்திற்கும் ஒரு கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜயகாந்தின் கதாப்பாத்திரம் GOAT படத்தில் இடம் பெறும் என்றும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பேசிக்கொள்கின்றனர். விஜயகாந்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதி கேட்ட வெங்கட் பிரபு:

விஜயகாந்தின் குடும்பத்தினரை சந்தித்து, அவரது AI கதாப்பாத்திரத்தை படத்தில் உபயோகிக்க GOAT படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அனுமதி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களும் அதற்கு அனுமதி காெடுத்துள்ளதாகவும், படத்தின் பிரிவ்யூவில் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

GOAT படக்குழு:

GOAT படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இவருடன், நடிகர்கள் பிரசாந்த், அஜ்மல், பிரபு தேவா, மைக் மோகன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட நாயகிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க | இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி!

படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது? 

GOAT படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே, விஜய்க்கு லுக் டெஸ்டிற்காக படக்குழுவினரான வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்து உள்ளிட்டோர் விஜய்யுடன் வெளிநாட்டிற்கு சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி, வேலை முடிந்த பிறகு மீண்டும் சில நாட்கள் கழித்து வெளிநாடு கிளம்பினர். பின்பு இஸ்தான்புல், ராஜஸ்தான், இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. தற்போது சென்னையில் GOAT படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலானது. 

ரிலீஸ் எப்போது? 

GOAT திரைப்படம், இந்த ஆண்டின் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவும் வெகு விரைவில் படப்பிடிப்பை முடிக்க மும்முரமாக உள்ளதாக திரை வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | Lal Salaam Box Office Collections: ‘லால் சலாம்’ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News