கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரசிகர்களால், ‘புரட்சி கலைஞர்’ என அழைக்கப்படும் இவரது மறைவு, தமிழக மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்தின் மறைவு பின்னர், பெரும் துயரில் இருந்த தமிழக மக்களை அவரை அடக்கம் செய்து வைத்துள்ள இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வந்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு -எழுத்தாளர். ஜி. பாலன்
அரசு மரியாதையுடன் தே மு தி க தலைவர் விஜயகாந்தின் உடலானது டிசம்பர் 29ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.மேலும் இதனை தொடர்ந்து திரை உலகை சேர்ந்த பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகினர். விஜயகாந்த் மறைத்ததற்கு பின் அவரை பற்றி மக்களுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் வெளியாகி உள்ளன.
அப்படி வெளியான விஷயங்களில் வெளியான ஒரு விஷயம் நடிகர் விஜயகாந்த், நடிகர் MGR படத்தை 100 முறை பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அப்படி 100 முறைக்கு மேல் பார்த்த படம் என்ன தெரியுமா?
ரசித்து பார்த்த திரைப்படங்கள்:
மதுரையில் ரைஸ் மில் நடத்தி வந்த நடிகர் விஜயகாந்த் ஒரு பெறிய MGR ரசிகர் ஆவர். எம்ஜிஆரின் பல படங்களை பார்த்து வளர்ந்த அவருக்கு, சினிமாவில் அன்றைய உச்ச நடிகராக இருந்த ரஜினியின் வளர்ச்சியை பார்த்து சினிமாவில் நடிப்பதற்கு ஆசை வந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் பலவருடத்திற்கு முன் ஒரு பேட்டியில் பேசியபோது. “ என் வீட்டுக்கு அருகே எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படம் ஓடியது,அந்த படத்தில் வரும் சண்டை கட்சிக்காகவே நான் அந்த படத்தை 120 முறை பார்த்தேன். அதன்பிறகு MGR நடித்த அரசிளங்குமாறி, நாடோடி மன்னன் போன்ற படங்களில் வரும் சண்டை காட்சிகள் அதற்கு பின்னர் வந்த படங்களில் இல்லை என நினைத்த போது வந்த படம் தன் ஆயிரத்தில் ஒருவன்” என்று கூறியுள்ளார். அப்படத்தை தான் 70 முறை பாத்ததாக கூறியுள்ளார். மேலும், தான் MGR ரசிகன் இல்லை வெறியன் என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் மறைவால் வாடிய திரை பிரபலங்கள்-ரசிகர்கள்:
நடிகர் விஜயகாந்தின் இறப்பு, தமிழகத்திற்கே பேரிழப்பாக பார்க்கப்பட்டது. தமிழ் திரையுலகில், விஜயகாந்தால் பல நடிகர்களும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வளர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விஜயகாந்தின் இறப்பின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜய், தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது விஜயகாந்துடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு திரைத்துறையில் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரும் விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த், நல்ல அரசியல் கட்சி தலைவராகவும் சிறந்த நடிகராகவும் மட்டும் இல்லாமல், நல்ல மனிதரகவும் வாழ்ந்துள்ளார் என்பதை அனைவரும் கூறினர். விஜயகாந்தின் உடல், அவரது தேமுதிக கட்சியின் வளாகத்திலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ