மகள் இறந்து 10 நாட்களில் பட ப்ரமோஷன்..! விஜய் ஆண்டனியை பாராட்டிய ரசிகர்கள்..!

Vijay Antony Interview: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதை அடுத்து, அவர் தனது அடுத்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2023, 05:28 PM IST
  • விஜய் ஆண்டனியின் மகள் மீரா சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
  • விஜய் ஆண்டனி ரத்தம் எனும் படத்தில் நடித்துள்ளார்.
  • இந்த படத்தின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி.
மகள் இறந்து 10 நாட்களில் பட ப்ரமோஷன்..! விஜய் ஆண்டனியை பாராட்டிய ரசிகர்கள்..!  title=

கோலிவுட் திரையுலகின் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர், விஜய் ஆண்டனி. இவரது 16 வயது மகள் மீரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை:

நடிகர் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா, சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தனது தந்தையின் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரது உடல், ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. மீரா, கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இது அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, மீராவின் உடல் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு திரையுலகினர் மட்டுமன்றி பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

விஜய் ஆண்டனியின் அடுத்த படம்..

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். அவரே இயக்கி நடித்திருந்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றதை அடுத்து, கொலை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்தனர். அடுத்து, சி.எஸ் அமுதன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த படம் ‘ரத்தம்’. இந்த படம் குறித்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | “அவளுடன் நானும் இறந்து விட்டேன்..” மகள் குறித்து உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி!

ரசிகர்கள் பாராட்டு..

விஜய் ஆண்டனி, தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய இழப்பிற்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் நேர்காணல் இது. இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அவர், படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தன்னை நம்பி படத்தை தயாரித்துள்ள படக்குழுவிற்காக அவர் இந்த நேர்காணலில் கலந்து காெண்டது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த நேர்காணலை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் விஜய் ஆண்டனியை பாராட்டி வருகின்றனர். 

“இனி இசையமைக்க உள்ளேன்..” 

விஜய் ஆண்டனி, நடிக்க இறங்கியதில் இருந்து முழு நேர நடிகராக மாறியிருந்தார். தான் இயக்கும், நடிக்கும் படங்களை தவிர வேறு எந்த படத்திற்கும் இசையமைக்காமல் இருந்தார். இவர், சில நாட்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பயங்கர வரவேற்பு அளித்தனர். இது குறித்து நேர்காணலில் பேசிய அவர், இனி வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் மட்டும் நடித்து விட்டு, இசையமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மகள் குறித்து பதிவு வெளியிட்ட விஜய் ஆண்டனி..

நடிகர் விஜய் ஆண்டனி, தன் மகளின் இறப்பை அடுத்த ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் “அவளுடன் சேர்ந்து நானும் இறந்து விட்டேன்..” என்று குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் பலரது இதயங்களை நொருக்கியது. அந்த பதிவில், தான் செய்யப்போகும் நல்ல காரியங்களுக்கு தன் மகளே துணை நிற்பாள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்களும் துணை நிற்போம் என்று கூறியிருந்தனர். 

மேலும் படிக்க | விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..மருத்துவர் சொன்ன தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News