வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

'வாரிசு' படத்திற்கும், 'துணிவு' படத்திற்கும் சரிசமமான அளவிலேயே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 16, 2022, 03:50 PM IST
  • வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
  • படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
  • அதிக தியேட்டர் வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! ஏன் தெரியுமா? title=

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் பல சிக்கல்களை தாண்டி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  'வாரிசு' படம் வெளியாகும் சமயத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படமும் வெளியாகி பாக்ஸ் ஆஃபிசில் மிகப்பெரிய மோதலை ஏற்படுத்த போகிறது.  விஜய்யின் 'வாரிசு' படத்திற்கும், அஜித்தின் 'துணிவு' படத்திற்கும் சரிசமமான அளவிலேயே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | விஜய் தான் நம்பர் 1; அதிக தியேட்டர் கொடுங்க - வாரிசு தயாரிப்பாளர் அதிரடி

Dilraju

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயம் கடும் விமர்சனங்களை சந்தித்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.  அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் அஜித் ரசிகர்களை காட்டிலும் விஜய் ரசிகர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  அதனால் உதயநிதியிடம் கேட்டு 'வாரிசு' படத்திற்கு அதிகளவிலான திரையரங்குகளை ஒதுக்குமாறு கேட்கபோவதாக தெரிவித்து இருந்தார்.  ஒரு நடிகரை உயர்த்தியும், மற்றொரு நடிகரை தாழ்த்தியும் தயாரிப்பாளர் தில் ராஜு இப்படியொரு தவறான கருத்தை கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  இதனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை அனல் பறந்து வருகிறது.

இந்த சர்ச்சையான பேச்சின் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜூவை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தும், திட்டி தீர்த்தும் வருகின்றனர்.  'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் சரியான அளவில் திரையரங்குகளை பங்கிட்டு உள்ளது.  இரண்டு நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே சரியான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Pathaan Controversy : சமூக வலைதளங்கள் முழுவதும் தீய எண்ணங்கள்தான்... வாய் திறந்த ஷாருக் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News