புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பாகிறது விக்ரம் ட்ரெய்லர்

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 31, 2022, 07:38 PM IST
  • ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது விக்ரம் படம்
  • புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் ட்ரெய்லர்
  • விற்று தீர்ந்த விக்ரம் டிக்கெட்டுகள்
புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பாகிறது விக்ரம் ட்ரெய்லர் title=

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இவர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர்.

படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால் ப்ரோமோஷன் பணிகளில் க்ரியேட்டிவாக யோசிக்கிறார். அந்தவகையில் பஞ்ச தந்திரம் படத்தில் கமல் நண்பர்களாக நடித்தவர்களை வைத்து விக்ரம் பட ப்ரோமோவை வெளியிட்டிருந்தார்.

Kamal

இதனைப் பார்த்த ரசிகர்கள் கமலின் ரசிகர் என்பதை லோகேஷ் நிரூபித்துவிட்டார். படத்தில் செம விருந்து காத்திருப்பதாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | சூர்யாவின் ’அருவா’ படத்தின் அப்டேட் - ஹரியின் சூடான பதில்

படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக கமல் ஹாசனும் ரஜினிகாந்த் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் கேரளா, மலேசியா ஆகிய பகுதிகளில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

Kamal

இந்நிலையில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதன்படி துபாயில் உள்ள உலகின் உயர்ந்தக் கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

 

163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கட்டடத்தின் பெரிய திரையில் ‘விக்ரம்’ ட்ரெய்லர் வரும் ஜூன் 2 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க | விக்ரம் - முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சி தலைவர்

இதுகுறித்து படத்தை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News