வைரல்!! விஜய்-62 படத்தின் போஸ்டர் லீக்

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். தற்போது அவரது ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated: Jan 3, 2018, 06:33 PM IST
வைரல்!! விஜய்-62 படத்தின் போஸ்டர் லீக்

நடிகர் விஜய் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு நடிக்கிறார்.

விஜய்-ன் 62வது படத்தின் முழு விவரம் - கிளிக்

இந்நிலையில், நேற்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த போட்டோஷூட் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய் கையில் சூட்கேசுடன் மிகவும் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.