சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்?- ஜி.வி. பிரகாஷ் கலகல

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்பது குறித்து கல்லூரி விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசினார். 

Last Updated : Apr 23, 2022, 01:29 PM IST
  • உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்
  • நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாகச் செய்யுங்கள்
  • அடுத்தவர்களின் உத்தரவுக்காகக் காத்திருக்காதீர்கள்
சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்?- ஜி.வி. பிரகாஷ் கலகல  title=

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்பது குறித்து கல்லூரி விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசினார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டார். 

ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரும் மாணவ, மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. 

மேலும் படிக்க | ‘குஷி’ மோடில் விஜய்- 66 டீம்?! - ஓ... இதுதான் காரணமா?!

அதனைத் தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். 

’’உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்  கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன். இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்குக் கடினமாகத் தோன்றவில்லை.

உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாகச் செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள்’’ என்றார். 

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஜி.வி.பிரகாஷ்  குமாரிடம் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டனர். அவரும் பேச்சிலர், மதராசப்பட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார். அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக் கத்தியும், கைதட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க | அடுத்த படத்தில் தனுஷை இயக்கும் நெல்சன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

 

 

 

Trending News