'ஆன்டி இந்தியன்' திரைப்படத்தில் 38 கட் செய்ய வேண்டும் என்று தணிக்கைக் குழுவினர் கூறினர். நீதிமன்றத்தை நாடி எந்த கட்டும் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளோம் என 'ஆன்டி இந்தியன்' பட இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆன்டி இந்தியன்' படத்திற்கு U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தணிக்கைச் சான்றிதழை பெறுவதில் பல சவால்கள் இருந்ததாக கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்த பிறகு பாராட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் Refuse என்று சொன்னார்கள். சென்னைக்கு பிறகு revision committee சார்பாக பெங்களூரில் படத்தை பார்த்தனர். மொத்தமாக 38 கட் வேண்டும் என்று கூறினர். அது மட்டுமின்றி 200 வார்த்தைகள் வரை கட் செய்ய வேண்டும் என்றார்கள்.
தணிக்கைக் குழுவிடமிருந்து எங்களுக்கு ஞயமான தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே தான் நீதிமன்றத்தை நாடினோம். கடந்த 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நாங்கள் எதிர்பார்த்தை காட்டிலும் நல்ல தீர்ப்பே எங்களுக்கு கிடைத்தது. படம் முழுமையாக வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர் எனக்கு உறுதுணையாக இருந்தார். ஆண்டி இந்தியன் படத்திற்கு நல்ல பப்ளிசிடி கிடைக்க, படத்திற்கு எதிராக பெட்டிசன் போட்டவர்கள்தான் காரணம். அனைத்து சிறிய படத்திற்கும் இவ்வாறு செய்யுங்கள்.
திரைத்துறைக்கு தணிக்கைக் குழு அவசியம்தான். தற்போது U, UA, A தணிக்கைச் சான்றிதழ் இருக்கிறது. AA, AAA என்று புதிதாக சான்றிதழ் கொண்டுவந்தால் நல்லதுதான் . தற்போதைய சட்டங்களுக்கு உட்பட்டு நல்ல படம் எடுங்க முடியும் என்றாலும் பயத்துடனே எடுக்க முடியும். படத்தில் புகைப் பிடிப்பது குறித்த எழுத்தை பெரிதாக்குமாறும், Disclaimer சற்று விரிவாக 30 விநாடிகள் வரை போடுமாறு கூறினார்கள். படத்தில் காட்சி எதையும் கட் செய்யவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் சுயலாபக்காரர்களைத்தான் 'ஆன்டி இந்தியன்' என்று குறிப்பிட்டுள்ளோம். மதத்தின் பெயரால் அரசியல் செய்வோரே ஆன்டி இந்தியன்.
அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளேன். மூன்று மதம் தொடர்பான படம் இது. குறிப்பிட்ட மதத்தினர் பிற மதத்தவறை அடக்குவதாக காட்டவே பட போஸ்டலில் குரங்கு ஒன்றுக்கு காவி துண்டு போர்த்தப்பட்டுள்ளது. படத்தில் கானா பாடல் ஒன்று இருக்கிறது என்று கூறினார்.
ALSO READ நாகேஷை புறக்கணிக்கிறதா அரசு? - கமல்ஹாசன் காட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR