அஜித்தின் நாயகி தற்போது வடிவேலுக்கு நாயகி!

Last Updated : Aug 23, 2017, 01:31 PM IST
அஜித்தின் நாயகி தற்போது வடிவேலுக்கு நாயகி! title=

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். 

கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. 

வடிவேலு, மனோரமா, நாசர், தேஜ ஶ்ரீ, மோனிக்கா, இளவரசு, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசையமைத்திருந்தனர்.

தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக் இன்றுவெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் பாகத்தின் இயக்குனர். இந்த பாகத்தை இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். வடிவேலு நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. 

இந்நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தவர் பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News