கோடிகளில் புரளும் பிக்பாஸ் 7 புகழ் யுகேந்திரன் வாசுதேவன்: சொத்து மதிப்பு விவரம் இதோ

Yugendran Vasudevan Net Worth: பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பங்குபெற்றார். இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2023, 11:14 AM IST
  • யுகேந்திரன் வாசுதேவனின் இசைப்பயணம்.
  • பிக் பாஸ் வீட்டில் யுகேந்திரன் வாசுதேவன்.
  • யுகேந்திரன் வாசுதேவனின் பிக் பாஸில் எவ்வளவு சம்பளம்.
கோடிகளில் புரளும் பிக்பாஸ் 7 புகழ் யுகேந்திரன் வாசுதேவன்: சொத்து மதிப்பு விவரம் இதோ title=

யுகேந்திரன் வாசுதேவனின் மொத்த சொத்து மதிப்பு விவரம்: மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

நடிகர், பாடகர் யுகேந்திரன் வாசுதேவன்:
யுகேந்திரன் வாசுதேவன் பிரபல பாடகரும், நடிகருமாவார். மேலும் யுகேந்திரன் வாசுதேவன் (Yugendran Vasudevan Net Worth) பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகனாவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத் துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

யுகேந்திரன் வாசுதேவனின் இசைப்பயணம்:
சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க | Bigg Boss Season 7: வைல்டு கார்டு என்ட்ரியில் இந்த விஜய் டிவி பிரபலம்? வெளியான வீடியோ!

யுகேந்திரன் வாசுதேவனின் திரைப்பயணம்:
அஜித்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யுகேந்திரன். இதன் பின் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படம் யுகேந்திரன் நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம்.

பிரபல இசையமைப்பாளர்களின் இசையில்:
இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா என தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள யுகேந்திரன் (Yugendran Vasudevan) பெரும்பாலான பாடல்களை இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் யுகேந்திரன் வாசுதேவன்:
கடந்த அக்டோபர் 1ம் தேதி படு மாஸாக பிக்பாஸ் 7வது சீசன் (Bigg Boss Tamil 7) 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் (Malaysia Vasudevan) மகன் யுகேந்திரன் இடம்பெற்றுள்ளார். இந்த சீசனில் அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

யுகேந்திரன் வாசுதேவனின் பிக் பாஸில் எவ்வளவு சம்பளம்:
தற்போது பிக் பாஸ் வீட்டில் பங்கேற்று வரும் நடிகரும், பாடகருமான யுகேந்திரனிற்கு ரூபாய் 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. 

யுகேந்திரன் வாசுதேவனின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது பிரபலத்தின் மகனாக வலம் வரும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 15 முதல் 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News