Sita Raman Serial Update News In Tamil : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் அர்ச்சனா மற்றும் சுபாஷ் பிச்சைக்காரன் விஷயத்தை அவர்களது மகள் உளறி விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது பிச்சைக்கார வேஷம் குறித்து அறிந்த ராம் அவர்கள் மீது சந்தேகப்படுகிறான். எந்த கோவில் வேண்டுதலுக்காக என்று கேட்க அவர்கள் சொல்லும் கோவில் எக்ஸ்போர்ட் கம்பெனி பக்கத்தில் இருப்பதாக மீரா சொல்ல ராமுக்கு சந்தேகம் அதிகமாகிறது.
உடனே ராம் சுபாஷிடம் சித்தப்பா உங்ககிட்ட தனியா பேசணும் என்று சொல்லி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அடி கொடுத்து ஜெயிலுக்குள் தள்ளுகிறான். பிறகு சுபாஷை வைத்து அர்ச்சனாவுக்கு போன் போட்டு நான்சிக்கு தெரியாமல் வெளியே வா, போலீஸ் ஜூப் வரும் அதுல ஏறி ஸ்டேஷனுக்கு வா என்று சொல்ல நைசாக வெளியே செல்ல இதை நான்சி பார்த்து விடுகிறாள்.
மேலும் படிக்க | பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!
அர்ச்சனாவையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வர ராம் உண்மைய சொன்னா சுபாஷ் அடிக்க மாட்டேன் என்று பயமுறுத்த நான்சிக்காக பிச்சைக்கார வேஷம் போட்டு வந்தோம். எக்ஸ்போர்ட் கம்பெனி இருக்கிற விஷயத்தையும் சொன்னோம் என உண்மையை உடைக்கின்றனர்.
அதோடு இல்லாமல் ராம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பெண்களை எங்கே எப்போது கைது செய்தார்கள் என்று விசாரிக்க அது லேடி போலீஸ் ஸ்டேஷன் என்பதை தெரிந்து ராம் அந்த ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ