இந்தியத் திருநாளான தீபாவளி அன்று, அமீரகத்தில், இந்திய கவுன்சில் ஜெனரல் இந்தியத் தூதரக உயரதிகாரிகளுடன் ஆடம்பரமான இரவு விருந்து ஒன்றை அளித்தார். இந்திய தூதரக அதிகாரி டாக்டர் அமன் பூரி, கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடியை மேற்கோள் காட்டி, புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாட்டின் நிரந்தர தூதர்கள் என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை தீபத் திருவிழா கொண்டாட்டங்களின் போது, தொழில் தூதர்கள் நமது சமூகத்தின் தூதர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் என்று இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டதைப் பற்றி தெரிவித்தார். முதலீடு, கலாச்சாரம், கல்வித்துறை என பல துறைகளில் நமது நிரந்தர தூதர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு உதவுகின்றன என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக அரசின் மூத்த அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள், நாட்டின் வர்த்தக சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பிற துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியர்களுக்கு அமீரகம் இரண்டாவது வீடாக உள்ளது என்றும், அங்குள்ள இந்திய சமூகம், தீபாவளியின் ஒளியையும் மகிழ்ச்சியையும் அமீரகம் எங்கும் பரவச் செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். எங்கள் சமூகம் உண்மையிலேயே இரு நாடுகளுக்கு இடையே வாழும் பாலம் என்று நான் சொல்ல வேண்டும் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
மாலையில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த குருகுலக் குழுவின் இந்திய பாரம்பரிய நடனங்களின் கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் படிக்க | துபாய்வாசிகளுக்கு நல்ல செய்தி: இனி எளிதாக காவல்துறை உதவியை பெறலாம்
முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவரான எமிராட்டியின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் தூதரக அதிகாரியுமான மிர்சா அல் சயீக், “அனைவருக்கும் நான் தீபாவளி நல்வாழ்த்துக்களை கூற விரும்புகிறேன். புதுதில்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் செயலாளராகவும், பின்னர் (தலைவர்) பம்பாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஆலோசகராகவும் நான் பணியாற்றிய காலத்தில், நான் நேசிக்கும், ஆதரித்த, பணிபுரிந்த மற்றும் உடன் வாழ்ந்த (இந்திய) சமூகத்தை நாம் என்றும் மறக்க மாட்டேன்" என்றார்.
தீபாவளி நாளில் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இனிப்புகளை பரிமாறி, அதனுடன் தங்கள் மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல இந்தியர்கள் திங்கட்கிழமை தீபாவளிக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளனர். அமீரகத்தில் உள்ள ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல ஆண்டுகளாக தீபாவளி கொண்டாட்டங்களை முழு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | NRI News: ரியல் எஸ்டேட் துறை முன்னேற்றத்துக்கு ஊக்கமளிக்கும் என்ஆர்ஐ முதலீடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ