அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: லாட்டரியால் மாறிய வாழ்க்கை

துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் 25 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 12:56 PM IST
  • இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் 25 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றனர்.
  • கேரளாவைச் சேர்ந்த இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமீரகத்தில் வசித்து வருகின்றனர்.
  • இவர்கள் அனைவரும் உணவகத் துறையில் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது.
அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: லாட்டரியால் மாறிய வாழ்க்கை title=

வியாழன் அன்று அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் 25 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றனர். தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமீரகத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் உணவகத் துறையில் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது ஊதியம் மதம் ஒன்றுக்கு 2,500 திர்ஹம் முதல் 3,000 திர்ஹமாகும். லாட்டரியில்பணம் சம்பாதிக்கும் ஆசையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, இதற்காகவே பிரத்யேகமாக பணம் சேமித்து இவர்கள் தொடர்ந்து டிக்கெட்களை வாங்கி வருகிறார்கள். 

இந்த பரிசு இவர்களுக்கு கிடைத்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட், சஜேஷ் என்.எஸ்.-க்கு போன் செய்தபோது, ​​சஜேஷ் முதலில் இதை ஒரு பிராங் கால் என நினைத்தார். தான் போனில் கேட்ட செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. 

“எங்கள் குழுவில் யாரோ ஒருவர்தான் போன் செய்து எங்களை ஏமாற்றுவதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அதே எண்ணிலிருந்து எங்களுக்கு பல அழைப்புகள் வந்தபோது, ​​நாங்கள் ஆன்லைனில் சரிபார்த்தோம். அதில் வெற்றி பெற்ற எண் எங்களுடையது என்பதைக் கண்டறிந்தோம், ”என்று சஜேஷ் கூறினார்.

மேலும் படிக்க | ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள் 

“நாங்கள் நேரடி ஒளிபரப்பை பார்க்கவில்லை. பல ஆண்டுகளாக, நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் கிடைக்கவில்லை. சில சமயங்களில் எங்கள் டிக்கெட்டுகளில் உள்ள சில இலக்கங்கள் வெற்றி பெறும் இலக்கத்துடன் ஒத்துப்போகும். வெற்றிக்கு அவ்வளவு அருகில் வந்தும் நாங்கள் வெற்றிபெற்றதில்லை. ஆகையால், நாங்கள் டிராவை நேரலையில் காண்பதை நிறுத்திவிட்டோம். மேலும் வெற்றியாளரின் பெயரை சமூக ஊடக தளங்கள் அல்லது ஊடக அறிக்கைகள் மூலம் தெரிந்துகொள்வோம்” என்று ஆண்டனி கூறினார்.

ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறினாலும், அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.

“யாரும் சரியாகத் தூங்காததால் இன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய பரிசை வெல்வோம் என கனவிலும் நினைத்ததில்லை. இது நாங்கள் முற்றிலும் எதிர்பாராதது" என்று ஆண்டனி கூறினார்.

வியாழன் மாலை நிகழ்வானது 2020 ஆம் ஆண்டிலிருந்து பிக் டிக்கெட்டின் முதல் வெளிப்புறக் குலுக்கல் ஆகும். டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் அடுத்த டிராவின் பரிசு 30 மில்லியன் திர்ஹம் ஆகும். இரண்டாவது பரிசு 1 மில்லியன் திர்ஹம், மூன்றாம் பரிசு 100,000 திர்ஹம் மற்றும் நான்காம் பரிசு 50,000 திர்ஹம் என பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று எனது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நாங்கள் தொடர்ந்து டிக்கெட்டுகளை வாங்குவோம் மற்றும் எங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிப்போம், ”என்று சஜேஷ் மேலும் கூறினார்.

பிக் டிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, இந்த மாதத்திற்கான ஒவ்வொரு வாராந்திர மின்-டிரா வெற்றியாளரும் 1 மில்லியன் திர்ஹம் பரிசை பெறுவார். 

மேலும் படிக்க | கனடாவின் மலிவுத் தொழிலாளர்களாக நாங்கள்? இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News