அமீரகத்தில் வசிக்கும் தமிழரா நீங்கள்? ரமலான் மாதத்தில் உங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்!!

Ramadan Offers 2023 in Dubai: ரமலான் பண்டிகை காலத்தில் நீங்கள் உங்கள் மன விருப்பம் படி ஷாப்பிங் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2023, 11:09 AM IST
  • ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் 'ரமதான் நைட்ஸ் 2023' .
  • 10,000 க்கும் மேற்பட்ட பொருட்களை ஷாப்பிங் செய்பவர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி.
  • இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 5 முதல் 21 வரை நடைபெறும்.
அமீரகத்தில் வசிக்கும் தமிழரா நீங்கள்? ரமலான் மாதத்தில் உங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்!! title=

ஷார்ஜாவில் வசிக்கும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. இந்த ரமலான் பண்டிகை காலத்தில் நீங்கள் உங்கள் மன விருப்பம் படி ஷாப்பிங் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் பல பொருட்களை மிக மலிவான விலையில் வாங்கலாம். இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் 'ரமதான் நைட்ஸ் 2023' இன் 40வது பதிப்பில், பிரபல பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பொருட்களை ஷாப்பிங் செய்பவர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 33வது ஷார்ஜா ரமலான் பண்டிகையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 5 முதல் 21 வரை நடைபெறும்.

இந்த புனித மாதத்தில், இந்த கண்காட்சியானது  தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், ஈத் அல் பித்ரின் போது மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும்.

17 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, புனித மாதம் முழுவதும் பார்வையாளர்களின் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு குடும்ப நிகழ்வாக இந்த கண்காட்சி விழா கோலாகலமாக செயல்படுகிறது.

மேலும் படிக்க | NRI News: கலிபோர்னியா குருத்வாராவில் துப்பாக்கி சூடு! இருவர் படுகாயம்!

ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் (எஸ்சிசிஐ) தலைவரும், ஷார்ஜா எக்ஸ்போ சென்டரின் தலைவருமான அப்துல்லா சுல்தான் அல் ஓவைஸ், இந்த நிகழ்வு பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்று கூறினார். சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தளத்தை இது வழங்குகிறது என அவர் தெரிவித்தார். இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான சூழ்நிலையில் பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஒருங்கிணைத்து ஆதரிக்கிறது.

எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மிட்ஃபா, இந்தக் கண்காட்சியானது குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அடுத்த 17 நாட்களில் ரமலான் மாலைகளை மகிழ்ந்து அனுபவிக்க ஒரு நேர்த்தியான மற்றும் அழகான இடத்தை வழங்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். பொதுவாக இந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு குடும்பங்களுடன் வரும் மக்கள் நண்பர்களுடன் பொழுதை கழித்து மிக மலிவான விலையில் பல வித பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

மேலும் படிக்க | இந்திய வம்சாவளி சிறுமி கொலை வழக்கு! 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News