தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி நிலை திரும்புவதால் 144 தடை உத்தரவினை வாபஸ் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 25-ஆம் நாள் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துக்கள் இயக்கப்பட்டன.
Tamil Nadu: Section 144 (prohibits assembly of more than 4 people in an area) which had been imposed in #Thoothukudi after the #SterliteProtest , has now been lifted.
— ANI (@ANI) May 27, 2018
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி நிலை திரும்புவதால் கடந்த 21-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்வதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணியுடன் தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.