அநீதியே 28 ஆண்டுகள் போதாதா! டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

எழுவர் விடுதலை கோப்பு தொடர்பாக  6 மாதங்கள் முடிந்தும் ஆளுநர் பதில் தெரிவிக்காத நிலையில், அநீதியே 28 ஆண்டுகள் போதாதா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

Last Updated : Mar 9, 2019, 01:00 PM IST
அநீதியே 28 ஆண்டுகள் போதாதா! டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்! title=

எழுவர் விடுதலை கோப்பு தொடர்பாக  6 மாதங்கள் முடிந்தும் ஆளுநர் பதில் தெரிவிக்காத நிலையில், அநீதியே 28 ஆண்டுகள் போதாதா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, ஆளுநர் இந்தப் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. இதை கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விரைவிலேயே இருவரின் உண்ணாவிரதமும் முடித்துவைக்கப்பட்டது.

ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி இன்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சென்னை, புதுச்சேரி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக #அநீதியே28ஆண்டுகள்போதாதா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றது.

Trending News