அகமதாபாத்: Python programming language தேர்வில் தேர்ச்சி பெற்று அகமதாபாத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், உலகின் இளைய கம்ப்யூட்டர் ப்ரோக்ராமராக கின்னஸ் உலக சாதனையை (Guiness World Record) பதிவு செய்துள்ளார். பியர்சன் வியூ சோதனை மையத்தில் மைக்ரோசாஃப்ட் சான்றிதழ் தேர்வில் 2 ஆம் வகுப்பு மாணவர் அர்ஹாம் ஓம் தல்சானியா வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
“என் தந்தை எனக்கு கோடிங் முறையை கற்றுக் கொடுத்தார். எனக்கு 2 வயதாக இருந்தபோது டேப்லெட் பயன்படுத்த ஆரம்பித்தேன். 3 வயதில், நான் iOS மற்றும் விண்டோஸுடன் கேஜெட்களை (Gadgets) வாங்கினேன். பின்னர், என் தந்தை பைத்தானில் (Python) பணிபுரிகிறார் என்பதை அறிந்தேன்” என்று தல்சானியா ANI இடம் கூறினார்.
I want to be a business entrepreneur & help everyone. I want to make apps, games and systems for coding. I also want to help the needy: Arham Om Talsania. #Gujarat https://t.co/dqnR3emyku pic.twitter.com/bA9Kn3eIjF
— ANI (@ANI) November 9, 2020
"பைத்தானிடமிருந்து எனக்கு சான்றிதழ் கிடைத்தபோது நான் சிறிய கேம்ஸ்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். சில நாட்கள் கழித்து, அவர்கள் என்னிடம் என் வேலைக்கான சில ஆதாரங்களை அனுப்பச் சொன்னார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் என்னை அங்கீகரித்தார்கள். எனக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் கிடைத்தது” என்று அவர் கூறினார்.
தல்சானியா ஒரு வணிக தொழில்முனைவோராக மாறி அனைவருக்கும் உதவ வேண்டும் என்று கனவு காண்கிறார். “நான் ஒரு வணிக தொழில்முனைவோராக இருந்து அனைவருக்கும் உதவ விரும்புகிறேன். கோடிங்குக்கான பயன்பாடுகள், கேம்ஸ் மற்றும் செயலிகளை உருவாக்க விரும்புகிறேன். நான் ஏழைகளுக்கு உதவ விரும்புகிறேன்” என்றார் அவர்.
மென்பொருள் பொறியாளராக இருக்கும் அர்ஹாம் தல்சானியாவின் தந்தை ஓம் தல்சானியா, தனது மகன் கோடிங் முறைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும், ப்ரோக்ராமிங்கின் அடிப்படைகளை அவருக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.
“மிகவும் சிறிய வயதிலிருந்தே அவருக்கு கேஜெட்களில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் டேப்லெட் சாதனங்களில் விளையாடுவார். பஸில்களை தீர்ப்பதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அவர் வீடியோ கேம்களை விளையாடுவதில் ஆர்வத்தை வளர்த்தபோது, அதை உருவாக்க நினைத்தார். நான் கோடிங் செய்வதை அவர் ஆர்வத்துடன் பார்த்துள்ளார்” என்று அவர் கூறினார்.
"நான் அவருக்கு ப்ரோக்ராமிங்கின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்தேன், அவர் தனது சொந்த சிறிய விளையாட்டுகளை உருவாக்கத் தொடங்கினார். மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கூட்டாளராகவும் அங்கீகாரம் பெற்றார். பின்னர் நாங்கள் கின்னஸ் புத்தக உலக சாதனையிலும் விண்ணப்பித்தோம்” என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: 1 hour-க்குள் 33 dishes செய்து 10 வயது கேரளப் பெண் செய்த சுவையான சாதனை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR