திருமணங்களில் கலாட்டா நடப்பதும் வேடிக்கையான வாடிக்கை. வரதட்சனை, சீர்வரிசை, செலவு என செலவுகள் எல்லாம் திருமண வீட்டாரைச் சேர்ந்த்து தான். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மானதாங்கல்கள் வருவதை கேட்டிருப்போம்.
அதேபோல், திருமண மண்டபத்தை பயன்படுத்தும்போது, பொருட்களை சேதப்படுத்திவிட்டால், கல்யாண மண்டப நிர்வாகத்தினர் இழப்பீடு கோருவதையும், கொடுத்திருக்கும் முன்பணத்தில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்வதையும் கேட்டிருக்கலாம்.
ஆனால், மணப்பெண், திருமண மண்டப நிர்வாகத்தினர் தனக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தொடுத்திருக்கும் வழக்கு விநோதமானதாக இருக்கிறது.
அதற்கு காரணம் என்ன என்பதைக் கேட்டால், “என்னம்மா! இப்படி செய்றீங்களே? இதெல்லாம் ஒரு காரணமா? எங்க ஊருக்கு வந்து பாருங்க!” என்று சொல்லத் தோன்றும். ஏனென்றால் மணப்பெண் கோரிய நஷ்ட ஈட்டுத் தொகையும் ஒன்றரை கோடி ரூபாய் என்பதால், நம் ஊரில் கல்யாணத்தை நடத்தவே அவ்வளவு பணம் ஆகாதே என்று பெருமூச்சும் எழலாம்.
Also Read | பாட்டிகள் நடனமாடினால் மக்களுக்கு பிரச்சனையா? இதென்ன கூத்து?
ஆனால், அந்த மணப்பெண்ணுக்கு தான் கோரும் இழப்பீட்டுத்தொகை நியாயமானதாக தோன்றியிருக்கிறது. அந்த பெண்ணுக்கு இவ்வளவு கோவம் வரும் அளவிற்கு திருமண மண்டப நிர்வாகம் செய்த தவறுதான் என்ன? தெரிந்தால் அற்பமான காரணமாக இருக்கலாம். ஆனால், அவர் வழக்கு தொடுத்ததற்கு நியாயமான காரணம் இருக்கிறது. இன்றைய நவீன உலகின் போக்கை காட்டும் ஒரு உதாரண சம்பவம்.
விருந்தினர்கள் தங்கள் பானங்களை 'மிகவும் வழுக்கும்' லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தரையில் எடுத்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் தவறியதால், அவர்கள் பானங்கள் கீழே சிதற விட்டதாக மணமகள் கூறுகிறார்.
மிகவும் பிரபலமான திருமண அரங்கு அது. இங்கிலாந்தின் சிறந்த திருமண இடமாக, கன்ட்ரி ஹவுஸ் வெட்டிங்ஸ் லிமிடெட் நடத்தும் 16th century Tudor manor house என்ற இந்த திருமண அரங்கை ஒருமுறை பத்திரிக்கை வாசகர்கள் தேர்ந்தெடுத்தனர்.
சிறந்த திருமண அரங்கு என்பதால் தான் புதிதாக திருமணமான தம்பதிகள் அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திருமண அரங்கில் தம்பதிகள் நடனமாடியபோது, மணப்பெண் வழுக்கி விழுந்து முழங்கை உடைந்துவிட்டது. இதற்காகத் தான் மணப்பெண் வழக்கு தொடர்ந்திருந்திருக்கிறார்.
Also Read | இந்தியாவில் மிக நீளமான தலைமுடி கொண்ட பெண்
மணமகள் காரா டோனோவன் இழப்பீடு கேட்க காரணம் என்ன சொல்கிறார்? “'மிகவும் வழுக்கும்' லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தரையை சரியாக பணியாளர்கள் பராமரிக்கவில்லை. விருந்தினர்கள் பானங்களை எடுத்துச் செல்லும்போது சிந்தாமல் கொண்டுபோவதை உறுதி செய்யவில்லை.
தரை மிகவும் வழுக்கும் தன்மையைக் கொண்டது, மதுபானங்களை கவனமாக எடுத்துச் செல்லுங்கள் என்று விருந்தினர்களிடம் சொல்லவும் இல்லை” என்கிறார் காரா டோனோவன்.
ஆசிரியராக பணிபுரியும் ஒரு இந்த கறார் மணப்பெண், தளத்தின் ஒரு மூலையில் பானங்கள் வைக்கப்பட்டிருந்த மேசை போடப்பட்டிருந்ததாகவும், அனைவரும் தாக சாந்தி செய்துக் கொண்டே நடனமாட ஊக்குவிக்கும் வகையில் அந்த அமைப்பு இருந்ததாகவும், அதனால் தான் தனது வாழ்க்கையின் முக்கியமான நாளன்று முழங்கை உடைந்து போனது என்று கூறுகிறார்.
Also Read | விஷ பாம்பை கையாளும் 2 வயது குழந்தை
அதுமட்டுமல்ல, விருந்தினர்கள் மதுபானங்களை குடித்துக் கொண்டே நடனமாடும்போது தரையில் சிந்திய மதுத்துளிகளை துடைக்கவும் அங்கிருந்த பணியாளர்கள் யாரும் முற்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.
இந்த சம்பவம் 2018 செப்டம்பர் மாதத்தில் நடந்தது. திருமண மண்டபத்தில் அவர் விழுந்து முழங்கை உடைந்த பிறகு, அதற்காக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்த பிறகும், காராவுக்கு வலி நிற்கவேயில்லை. அதனால் அவர் இன்னமும் வேலைக்கு போக முடியவில்லை. இப்போது, இரண்டு குழந்தைகளின் தாயான நிலையில், தனது அவல நிலைக்கு திருமண மண்டபத்தின் ஊழியர்கள் தான் காரணம் என்று அன்றைய மணப்பெண் குற்றம் சுமத்துகிறார்.
இதுவரை இந்த வழக்கில் திருமண அரங்கின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. இதுபோன்ற வழக்குகள் அரிதிலும் அரிதானவை என்பதால், தீர்ப்பு என்னவாக இருக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Also Read | அம்மாவை பார்க்க போறேன்’; நம்பிக்கையுடன் செல்லும் குட்டி யானை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR