சாகசம் செய்த புல்லட் பாண்டி மல்லாக்க விழுந்த வீடியோ வைரல்

சாகசம் செய்த புல்லட் பாண்டி, திடீரென மேடு ஏற முடியாமல் நிலைதடுமாறி மல்லாக்க கவிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2023, 06:32 PM IST
  • புல்லட் பாண்டியின் வீடியோ வைரல்
  • மேடையில் ஏறி மல்லாக்க கவிழ்ந்தார்
  • 80,000 மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்
சாகசம் செய்த புல்லட் பாண்டி மல்லாக்க விழுந்த வீடியோ வைரல் title=

வயிறு குலங்க சிரிக்க வைக்கும் வீடியோவை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்த புல்லட் பாண்டி வீடியோ அதுவாக இருக்கும். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவுக்கு  பின்னணியில் சார்லி மற்றும் வடிவேலுவின் புல்லட் பாண்டி காமெடி வாய்ஸ் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த காமெடிக்கு என்றே உருவாக்கப்பட்டதுபோல் புல்லட் பாண்டி மல்லாக்க கவிழும் காட்சி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை வீடியோ பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | புலியுடன் வம்பிழுக்கும் குரங்கு, இவ்வளவு தைரியமா? பிறகு என்ன நடந்தது: வீடியோ வைரல்

புல்லட் பாண்டி நண்பர்களோடு வார இறுதி நாளில் எங்கோ இயற்கை எழில் மிகுந்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். வீடியோவில் இருப்பவர்களை பார்க்கும்போது எல்லோரும் ஐடி ஊழியர்கள்போல் தெரிகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் பைக்கில் மலையேறும் சாகச விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள். செங்குத்தான மேட்டில் பைக்கை வெற்றிகரமாக ஓட்டிச் செல்ல வேண்டும். இந்த போட்டியை கேட்டவுடனே ரொம்ப சந்தோஷத்தில் இருந்த புல்லட் பாண்டி தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருந்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவாறு புல்லட் பாண்டி சாகசம் செய்வதை கை தட்டி உற்சாகம் செய்தனர்.

அந்த வீராப்பில் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்ற  அந்த புல்லட் பாண்டி, ஏறத்தாழ மேட்டை கடந்துவிட்டார் என எல்லோராலும் நினைக்கப்படும்போது அவரால் பைக்கை பேலன்ஸ் செய்ய முடியவில்லை. உடனே பைக்கை விட்டுவிட்டு தனியாக தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கும்போது அந்தரத்தில் நின்று கொண்டிருந்த பைக் அவர் மீது விழ, பின்னர் அவரும் சேர்ந்து தடதடவென உருண்டுக் கொண்டே கீழே வந்தனர்.

இதனை அங்கிருந்த புல்லட் பாண்டியின் நண்பர்கள் உள்ளிட்ட யாராலும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிரிப்பையும் அடக்க முடியவில்லை. பைக் அந்தரத்தில் இருந்து புல்லட் பாண்டியுடன் கீழே விழுந்து வருவதை பார்த்தவுடன் வயிறு வலிக்க குலுங்கி குலுங்கி சிரித்தனர். அவர்கள் மட்டுமல்ல வீடியோவை பார்த்த எல்லோரும் தான் வயிறு குலுங்க சிரிக்கின்றனர். இந்த வீடியோவை நீங்களும் பார்க்கும்போது நிச்சயம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்.

இங்கே வீடியோவை பார்க்கலாம்;

மேலும் படிக்க | காட்டு கழுதைகளை காரில் துரத்தும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News